வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காசே வாங்காமல் நட்புக்காக நடித்துக் கொடுத்த 5 நடிகர்கள்.. இமேஜ் பார்க்காமல் சரத்குமார் போட்ட கெட்டப்

படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் கோடி கணக்கில் தன் சம்பளத்தை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நட்புக்காக காசே வாங்காமல் நடித்து கொடுத்த ஹீரோக்களும் தமிழ் சினிமாவில் இருக்க தான் செய்கிறார்கள்.

தனக்கு செய்த உதவியாகவும், மேலும் தன் முன்னேற்றத்திற்கு துணையாக இருந்தவர்களுக்கு கைமாறாகவும் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். அவ்வாறு நட்புக்காக, காசே வாங்காமல் நடித்துக் கொடுத்த 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: நிஜத்திலும் நடிக்கப் போகும் விஜய்.. 400 கோடிகளை தூக்கி எறிவதற்கு பின்னால் உள்ள ராஜதந்திரம்

விஜயகாந்த்: 1993 எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் செந்தூரப்பாண்டி. இப்படத்தில் விஜயகாந்த்,கௌதமி, யுவராணி, விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் செந்தூரப்பாண்டியாக விஜய்யின் அண்ணனாக விஜயகாந்த் நடித்திருப்பார். சந்திரசேகர் மீது வைத்திருந்த நட்புக்காக இப்படத்தில் இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம்.

அஜித்: 2021ல் கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். ஸ்ரீதேவியின் எதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. இப்படத்தில் ஸ்ரீதேவி மீது கொண்ட நட்பின் காரணமாக இப்படத்தில் அஜித் குமார் விருந்தினர் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும் படத்திற்கு அஜித்குமார் சம்பளம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்து பின் ஏங்கிய 4 நடிகைகள்.. வெறுத்த பின்னர் கல்யாணம் வரை சென்ற காதல்

சூர்யா: பிரம்மாண்டத்தின் படைப்பாக மாபெரும் ஹிட் கொடுத்த கமலின் படம் தான் விக்ரம். இப்படத்தில் இறுதியில் வில்லன் கதாபாத்திரத்தில் ரோலக்ஸ் ஆக களம் இறங்கி இருப்பார் சூர்யா. இப்படத்தில் யார் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என கேள்வி எழுந்தபோது கமல் தான் சூர்யாவை நடிக்க வைத்தாராம்.

சரத்குமார்: 2011ல் பயமூட்டும், நகைச்சுவை படமாக வெளிவந்த காஞ்சனா படத்தில் சரத்குமார், லாரன்ஸ், கோவை சரளா, லக்ஷ்மி ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தன் இமேஜை பொருட்படுத்தாமல் நட்புக்காக பெண் வேடத்தை ஏற்று நடித்திருப்பார் சரத்குமார். இவரின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: ஒரு நிலையில் இல்லாத விடா முயற்சி.. விடாத பணத்தாசையில் எல்லாத்தையும் இழக்கும் அஜித்குமார்

சிம்பு: சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் வாரிசு. இப்படத்தில் தமன் இசையமைப்பில் வெளிவந்த தீ தளபதி என்னும் பாடலை சிம்பு தான் பாடியிருப்பார். இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சிம்பு விஜய் மீது கொண்ட நட்பை போற்றும் விதமாக இப்பாடலை சிறப்புற பாடியிருப்பார்.

Trending News