வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

லிப் லாக் காட்சியில் நடித்த 5 நடிகர்கள்.. விஜய்யை கிஸ் அடிக்க வைத்த எஸ்ஜே சூர்யா

பொதுவாக முன்னணி நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் எல்லாவிதமான கேரக்டர்களையும் நடித்துக் காட்டிய பிறகுதான் மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் சில நடிகர்கள் படத்தில் ஒரே ஒரு முறை காதலிக்கு கிஸ் கொடுத்து நடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களைப் பற்றி பார்க்கலாம்.

விஜய்: எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு குஷி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜோதிகா, விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, மும்தாஜ், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் ஒரே காலேஜில் படிக்கும் போது அவர்களுடைய நண்பர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இவர்களுக்கிடையே நட்பு உருவாகி அதுவே காதலாகி விடுகிறது. அதன்பின் வரும் மோதல்களால் இவர்கள் பிரிய நேரிடும். பின்பு ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவித்து வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் இவர்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் ஒன்று சேரும் காட்சியில் இருவரும் ஓடி வந்து ஜோதிகா உடன் விஜய் லிப் லாக் கிஸ் கொடுத்திருப்பார்.

Also read: சரண்டர் ஆன வெங்கட் பிரபு.. விஜய் வந்ததும் மாஸ் ஹீரோவை கழட்டிவிட்ட பரிதாபம்

விக்ரம்: VZ துரை இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், பிரியங்கா திரிவேதி, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம் மற்றும் பிரியங்கா இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்ரம் ஒரு நேரத்தில் அவரை கண்ணோடு கண் நோக்கி வாயோடு வாய் வைத்தும் முத்தம் கொடுத்து விடுவார்.

சூர்யா: சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஃபிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, விஜயலட்சுமி, ஸ்ரீமன், வடிவேலு, சார்லி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருந்தாலும் காதலையும் அழகாக காட்டிய படமாக வெற்றி பெற்றது. இதில் அண்ணனின் நண்பரை காதலிக்கும் விஜயலட்சுமி அவருடைய காதலின் ஆழத்தை வெளிப்படுத்துவதற்காக சூர்யாவை கிஸ் பண்ணி விடுவார்.

Also read:  கங்குவா படத்திற்காக தீயாய் உழைக்கும் சூர்யா.. நியூ லுக் போட்டோவால் எகிறிய மார்க்கெட்

விஷால்: இயக்குனர் திரு இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு நான் சிகப்பு மனிதன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால், லட்சுமிமேனன், இனியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஏதாவது ஒரு ஷாக் ஆகுற மாதிரி விஷயம் இருந்தால் அந்த இடத்திலேயே அவருக்கு தூங்கும் ஒரு பழக்கம் உண்டு. அப்படிப்பட்ட இவர் லட்சுமி மேனன் உடன் காதல் வசப்பட்டு இருக்கும் பொழுது இவருக்கு விஷால் மீது இருந்த அளவு கடந்த காதலால் விஷாலுக்கு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்து விடுவார்.

கௌதம் கார்த்திக்: மணிரத்னம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு கடல் திரைப்படம் வெளிவந்தது. இதில் கௌதம் கார்த்திக், துளசி நாயர், அர்ஜுன், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தான் கௌதம் மற்றும் துளசி இவர்கள் இருவரும் அறிமுகமான முதல் படம். அறிமுகமான முதல் படத்திலேயே இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து லிப் கிஸ் அடித்திருப்பார்கள்.

Also read: மிரட்டிய கௌதம் கார்த்திக், கலங்க வைத்த புகழ்.. ஆகஸ்ட் 16 1947 எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News