வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சாப்பிடுவதற்கு என பெயர் போன 5 நடிகர்கள்.. குதிரைப்பால், எருமை தயிர் என வளைத்து கட்டும் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலர் சாப்பாட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுவதன் மூலம் ரசிகர்களிடம் பெயர் போனவர்கள். அதிலும் எருமை தயிர், குதிரைப்பால் என விதவிதமாக வளைத்துக் கட்டுகிறார் நடிகர் நெப்போலியன்.

ராஜ்கிரண்: தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்த இவர் இதுவரை 25 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். அதிலும் இவருடைய படங்கள் அனைத்திலும் கிராமத்து மண் கமலும் விதத்தில் அமைந்திருக்கும். அதிலும் இவர் சில படங்களில் மீனை அப்படியே எடுத்து உறிஞ்சி முள்ளை மட்டும் வெளியே எடுக்கும் காட்சிகளும், ஆட்டு எலும்பை அலேக்கா கடிக்கும் காட்சிகளும் இவருடைய அடையாளமாகவே மாறியது. இப்படி படத்தில் மட்டுமல்ல இவர் நிஜ வாழ்க்கையிலும் சாப்பாட்டுப் பிரியராகவும் இருக்கிறார்.

நெப்போலியன்: தமிழ் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதுவரை 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். உயரத்திலும் கம்பீரத்திலும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இவருடைய அசத்தலான நடிப்பு பலரையும் கவர்ந்தது. தற்போது அமெரிக்காவில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் நெப்போலியன் சாப்பிடுவதற்கு பெயர் போனவர். அதிலும் குதிரைப் பால், எருமை தயிர் என சாப்பாட்டை பாத்தி கட்டி வளைத்துக் கட்டுவாராம்.

Also Read: பழைய ரூட்டுக்கே திரும்பிய சத்யராஜ்.. மிரள வைக்க வரும் அவதாரம்

வேலராமமூர்த்தி: தமிழில் வெளியான ஆயுதம் செய்வோம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான வேலராமமூர்த்தி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி திரைப்படத்தில் வாத்தியார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவரை நம்மால் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இதை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி திரைப்படத்தில் கொம்பையா பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்த வேல ராமமூர்த்தி சிறந்த வில்லன் என்ற பல விருதுகளையும் பெற்றார். சாப்பிடுவதில் அதிக நாட்டம் கொண்ட இவர் படப்பிடிப்பு தளத்தில் 32 சப்பாத்தி, ஒரு முழு ஆட்டை அசால்டாக முழுங்குவாராம்

சத்யராஜ்: ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா!” என பஞ்ச் டயலாக் அடித்து வில்லாதி வில்லனாக தமிழ் சினிமாவிற்கு என்று கொடுத்து அதன் பிறகு கதாநாயகனாகவும் கலக்கிய இவர் தற்போது குணசேத்திர வேடங்களில் சினிமாவில் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார் ஆறடி உயரத்திற்கு மேல் வளர்ந்த வாட்டசாட்டமான நடிகரான இவரும் சாப்பிடுவதற்கு பெயர் போன நடிகர்களின் லிஸ்டில் முக்கியமான இடத்தை பிடிப்பார். அந்த அளவிற்கு இவர் படப்பிடிப்புத் தளத்தில் பலரையும் மிரளவைக்கும் அளவுக்கு சாப்பிடுவாராம் Also Read:

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர்.. பதிலுக்கு நெப்போலியன் செய்த காரியம்

காதல் தண்டபாணி: பார்ப்பதற்கே முரட்டுத்தனமான கெட்டப்பில் இருக்கும் இவர், 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் வீட்டுப் பெயர் போன இவரும் சாப்பாட்டை அதிகம் விரும்பி சாப்பிடும் நடிகர் ஆவார். அதிலும் ஷூட்டிங்கில் இவர் பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு பாத்தி கட்டி சாப்பிடுவாராம்.

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிற வரைக்கும் திண்ணே அழிக்கணும் என்று, எந்த பாரபட்சமும் பார்க்காமல் வேண்டியதை எல்லாம் வளைத்துக் கட்டி சாப்பிடுவதற்கு என பெயர் போன நடிகர்களானார்கள்.

Also Read: தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட தரமான 5 துணை நடிகர்கள்.. ஹீரோவுக்கு நிகராக பாராட்டும் ரசிகர்கள்

Trending News