கொஞ்சம் மோசமான ரஃக்டு லுக்கை வைத்து ஜெயித்த 6 நடிகர்கள்

5 actors popular of rugged look: பொதுவாக மக்களுக்கு சினிமா நடிகர்களை எதை வைத்து பிடித்துப் போகிறது என அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது. ஒரு சில நடிகர்கள் அழகாக இருப்பதால் வாய்ப்புகளை பெறுவார்கள். ஒரு சிலர் வித்தியாசமான குரலுக்கு கூட தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள். அப்படித்தான் இந்த ஐந்து நடிகர்களும் கொடூரமான தோற்றத்தை வைத்து சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள்.

யோகி பாபு: நடிகர் யோகி பாபு சுமாரான முக அமைப்பினாலும், தலை முழுக்க இருக்கும் சுருட்டை முடியினாலும் மக்களிடையே பரீட்சையமானார். பல படங்களில் இவர் தன் தோற்றத்தை தானே கிண்டல் செய்து இருக்கிறார். ஆனால் நடிப்புக்கு அழகு தேவை இல்லை என்பதை நிரூபித்த யோகி பாபு, ஹீரோவாக நடித்த படங்கள் கூட பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன.

காதல் தண்டபாணி: 90ஸ் கிட்ஸ்கள் பார்த்து பயந்த வில்லன்களில் காதல் தண்டபாணியும் ஒருவர். காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவின் அப்பாவாக வரும் இவர் கொடூரமான தோற்றம், முரட்டுத்தனமான குரல் என வில்லன்களில் வித்தியாசமாக இருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து முன்னணி நடிகராக வந்து கொண்டிருக்கும் பொழுதே, எதிர்பாராத விதமாக மரணம் அடைந்து விட்டார்.

திமிரு விநாயகம்: நடிகர் விநாயகம் பல படங்களில் நடித்திருந்தாலும், திமிரு படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். திமிரு படத்தின் வில்லி ஈஸ்வரியுடன் ஒரு சில காட்சிகளில் வந்த இவர், அதன் பின்னர் படம் முழுக்க விஷாலை தொடர்ந்து பாலோ செய்வது போல் காட்டப்பட்டு இருக்கும். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயலலிதா படத்திலும் நடித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன்: நடிகர் மொட்டை ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும், இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தின் மூலம் மிரட்டி இருந்தார். அடுத்தடுத்து வில்லனாக நடித்த இவரே ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்த பொழுது, காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என தன்னுடைய ட்ரக்கை மாற்றிவிட்டார்.

IM விஜயன்: நடிகர் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் ஆன திமிரு படத்தில் விஜயின் வில்லி கேரக்டரில் நடித்த ஸ்ரேயா ரெட்டியின் அண்ணனாக நடித்திருப்பார். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிகில் திரைப்படத்திலும் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →