சம்பாதிக்கும் ஆசையில் கடனாளியான 5 நடிகர்கள்.. 45 கோடிகளுக்கு கப்பம் கட்டிய தனுஷ்

சினிமாவில் உள்ள நடிகர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பில் இறங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள். இதில் பெரிய நடிகர்கள் முன்னால் சிறு நடிகர்கள் வரை பெரிய அடி வாங்கி உள்ளனர். அந்த வகையில் சம்பாதிக்கும் ஆசையில் கடனால் என ஐந்து நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

ஆர்யா : நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக 9 படங்கள் தயாரித்துள்ளார். ஆனால் இவர் தயாரித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆர்யா தயாரித்து நடித்து வெளியான கேப்டன் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமன்றி மலையாளத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ஓட்டு படத்தையும் ஆர்யா தான் தயாரித்திருந்தார். இந்த படமும் பல கோடி நஷ்டத்தை பெற்று தந்தது.

Also Read : ஆர்யாவை சர்ச்சையில் சிக்க வைத்த முத்தையா.. காதர் பாட்ஷா போஸ்டரில் இருக்கும் மர்மம்

பிரபு : பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் கணேசன் ஆகியோரால் சிவாஜி ப்ரொடக்ஷன் நிறுவனம் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் மன்னன், சந்திரமுகி போன்ற படங்களை இந்நிறுவனம் தான் தயாரித்தது. இப்படம் 2010ல் அஜித்தின் அசல் படத்தை தயாரித்த நஷ்டத்தை சந்தித்தது.

விஜய் சேதுபதி : முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி பல தயாரிப்பாளர்களுக்கு வசூலை வாரி கொடுத்துள்ளார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை. அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து, தயாரித்த ஜிங்கா மற்றும் லாபம் படத்தால் அவருக்கு 7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

Also Read : கெட்டது பேசினா தான் காசு வருது, சட்டையை கிழிச்ச விஜய் சேதுபதி.. பரபரப்பை கிளப்பிய மேடை பேச்சு

கஞ்சா கருப்பு : காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையை பதித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் படத்தை தயாரிக்க முடிவெடுத்தார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளியான வேல்முருகன் போர்வெல் படம் இவருடைய மொத்த சொத்தையும் அளிக்கும் அளவுக்கு நஷ்டத்தை கொடுத்தது.

தனுஷ் : பிரபல நடிகரான தனுஷ் வொண்டர் பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் 3, எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களை தயாரித்து உள்ளார். இந்நிலையில் ரஜினியின் காலா படத்தின் மூலம் இப்படம் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு முன்னதாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் 45 கோடி நஷ்டத்தை தனுஷ் சந்தித்திருந்தார்.

Also Read : கேப்டன் மில்லருக்கு பின் போலீசாக மிரட்டும் தனுஷ்.. அஜித்தின் அஸ்தான இயக்குனர் தயார் செய்த உண்மை கதை