திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உச்சம் தொட்டாலும் அலட்டலும், ஆணவமும் இல்லாத 5 நடிகர்கள்.. எதையும் கொண்டாடாத விக்ரம்

Actor Vikram: சில நடிகர்களுக்கு தொடர்ந்து நான்கு, ஐந்து படங்கள் வெற்றி அடைந்து விட்டாலே அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவராக பந்தா காட்டுவார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் மத்தியில் சில நடிகர்கள் எவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்றிருந்தாலும், எந்தவித அலட்டலும் ஆணவம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

விஜயகாந்த்: இவருடைய எதார்த்தமான நடிப்புக்கும், நேர்மைக்கும் ஈடாக தற்போது வரை எந்த ஒரு நடிகர்களாலும் வர முடியவில்லை. இவரைப் பற்றி வெளிவருகிற ஒவ்வொரு விஷயங்களும் நல்லதாக மட்டுமே இருக்கிறது. இவரை வெறுப்பவர்கள் என்று யாராலும் ஒருவரை கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு வெகுளியான தங்க மனசுக்காரர். அப்படிப்பட்ட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்தும், எந்தவித பந்தாவும் காட்டாமல் எதார்த்தத்துடனே இருந்திருக்கிறார்.

Also read: தலையாட்டி பொம்மையாய் மாறிய விஜயகாந்த்.. பாலகிருஷ்ணா போல் தமாஷ் ஹீரோவாக மாறிய கேப்டன்

பிரசாந்த்: 90களில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றியை மட்டும் பார்த்தது. அத்துடன் இவருடைய டான்ஸ்க்கும், நடிப்புக்கும் பல பெண்கள் தவமாக இருந்து இவருடைய படங்களை பார்த்து ரசித்து வருவார்கள். அப்படிப்பட்ட இவர் அனைவரிடம் பழகி பெரிய ஹீரோ என்று மாஸ் எங்கேயும் காட்டாமல் உச்சத்தை தொட்டிருக்கிறார்.

விக்ரம்: சினிமாவிற்குள் எந்தவித உதவியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த சேது படத்தின் வெற்றியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் தன்னை வருத்திக் கொண்டு முன்னணி நடிகராக வந்திருக்கிறார். கஷ்டப்பட்டு வந்ததாலோ என்னமோ எந்த இடத்திலும் ஓவராக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.

Also read: லோகேஷுக்காக இறங்கி வந்த விக்ரம்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் சீயான் 62

ராம்கி: இவர் நடிப்பால் தமிழ் சினிமாவில் அங்கீகாரத்தை பெற்று வெற்றி கண்ட படங்கள் ஏராளமாக உள்ளது. அதுவும் இவர் 90ல் நடித்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகி வித்தியாசமான படங்களாக இருக்கிறது. அப்படிப்பட்ட இவர் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எந்த இடத்திலும் பந்தா பண்ணாமல் தனித்துவமாக இருந்து வருகிறார்.

ராஜ்கிரண்: இவருடைய இளமை காலத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அத்துடன் இவருடைய நடிப்பை வியந்து பார்க்கும் அளவிற்கு கதைக்கு ஏற்ற நாயகனாகவே மாறி எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் பந்தா என்றால் என்னவென்றே தெரியாமல் சாதாரண நடிகராக உலா வந்திருக்கிறார். இன்னமும் இவரை தேடி பல வாய்ப்புகள் வருகிறது என்றால் இவருடைய எளிமையான நடிப்பு தான் என்றே சொல்லலாம்.

Also read: ஹீரோயின் மீது கிரஸ்சாகி தூக்கத்தை தொலைத்த ராஜ்கிரண்.. அம்மாவிடமே சிபாரிசுக்கு சென்ற மாயாண்டி

Trending News