வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பல கோடிகள் சம்பளம் வாங்கியும் இன்கம்டேக்ஸில் சிக்காத 5 நடிகர்கள்.. விஜய்யை பீதியில் உறைய வைத்த புலி

பிரபலங்களை பொறுத்தவரை அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர்கள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை பெறுகிறார்கள். அதன் மூலம் அளவிற்கு மீறி சேர்க்கப்படும் சொத்துகளுக்கு இவர்களும் இன்கம்டேக்ஸ் கட்ட வேண்டியது அவசியம்.

முக்கிய பிரபலங்களாக இருந்தாலும் தான் நடித்த படத்தின் மூலம் கிடைத்த சொத்துக்களாக இருந்தாலும் அவற்றிற்கும் வருமானத்துறைக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். அவ்வாறு இதுவரை இன்கம்டேக்ஸ் பிரச்சனை பண்ணாத 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: நிற்கக் கூட நேரமில்லாமல் பிஸியாக நடிக்கும் கமலின் 4 படங்கள்.. கொட்டும் பணமழை

கமலஹாசன்: சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றியை குறித்து தன் சம்பளத்தை சுமார் 130 கோடியாக உயர்த்திக்கொண்டார் கமல். இந்நிலையில் தன் சம்பளத்தை கொண்டு இன்கம்டேக்ஸ் சரிவர கட்டி வந்த கமல் வருமானத்துறையினரால் பாராட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கமல் திரைத்துறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.

அஜித்: தன் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்று வரும் அஜித் இன்கம்டேக்ஸ் சரிவர கட்டி வருவதால், வருமானத்துறையால் இன்றுவரை இவருக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருந்து வருகிறார். மேலும் பிடிக்கப்படும் டேக்ஸ் நியாயமான முறையில் உயர்த்த பட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசாங்கத்திற்கு வெளிப்பெடுத்தியவர் அஜித்.

Also Read: 70 வயதிலும் துவச்சு துவம்சம் பண்ணும் சூப்பர் ஸ்டார்.. ரஜினியின் லைன் அப்பில் இருக்கும் 4 படங்கள்

விக்ரம்: இவர் நடிப்பில் வெளிவந்த சாமி 2 படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் 53 கோடி. ஆனால் இவர் படத்திற்கு 12 கோடி சம்பளத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப தன் சம்பளத்தை ஏற்றி இறக்கும் இவர் தன் இன்கம்டேக்ஸை சரிவர கட்டி வருகிறாராம்.

விஜய் சேதுபதி: சமீப காலமாக இவரின் படத்திற்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதால் என்றும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. சராசரியாக தன் வெற்றி படங்களை கொண்டு சம்பளத்தை ஏற்றி வரும் இவர் இன்று வரை இன்கம்டேக்ஸ் பிரச்சனையில் சிக்காதவராக இருந்து வருகிறார்.

Also Read: ரவுண்டு கட்டி அடி வாங்கும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்.. நயன்தாரா விட்ட சாபம் தான் போல

அர்ஜுன்: அன்றைய காலகட்டத்தில் தன் வெற்றிக்கு தகுந்த சம்பளத்தை பெற்ற இவர் இன்று வரை எந்த ஒரு இன்கம்டேக்ஸ் பிரச்சினையிலும் சிக்காமல் சரி வர டேக்ஸ் கணக்கு காட்டி வருகிறார்.

இந்த பட்டியலில் விஜய் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2015ல் வெளிவந்த புலி படத்தின் சம்பளத்தில் கணக்கில் வராத 15 கோடி தொகைக்கு சுமார் 1.5 கோடி நஷ்ட ஈடு கட்டியுள்ளார்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Also Read: ஜூன் மாத ரிலீசுக்கு காத்திருக்கும் 7 படங்கள்.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரும் மாமன்னன்

Trending News