புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தொடர் தோல்வி அடைந்தாலும் சம்பளத்தை குறைக்காத 5 நடிகர்கள்.. சிக்கி சின்னாபின்னமான ஆர்யா

சினிமாவைப் பொறுத்த வரையில் பெரிய ஹீரோக்கள் இப்போது 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனாலும் சில நடிகர்கள் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்தாலும் தங்களது சம்பளத்தை குறைத்த பாடு இல்லை. அவ்வாறு பிளாப் படம் மட்டுமே கொடுத்து சம்பளத்தை கொஞ்சமும் குறைக்காத ஐந்து நடிகர்களை பார்க்கலாம்.

ஜெயம் ரவி : பொன்னியின் செல்வன் படத்தை தவிர ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படங்களும் ஓடவில்லை. ஆனால் தற்போது கைவசம் எக்கச்சக்க படங்களை ஜெயம் ரவி வைத்துள்ளார். அதன்படி இறைவன், சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 10 லிருந்து 15 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

Also read: மனித உருவில் மிருகமாய் இருக்கும் 5 இயக்குனர்கள்.. மூன்று பகுதிகளையும் திருப்பி எடுத்த வெற்றிமாறன்

பிக் பாஸ் ஆரி : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவு பெற்றதுடன் மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் பட்டத்தையும் ஆரி அடித்திருந்தார். இவர் ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்போது தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால் ஆரி பட வாய்ப்பு இல்லாமல் உள்ளார். ஆனாலும் தனது சம்பளத்தை குறைக்க மாட்டேன் என விடாப்பிடியாக இருக்கிறார்.

ஆர்யா : சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு எனிமி, கேப்டன் போன்ற படங்களில் நடித்து தொடர் தோல்வியை தழுவினார். ஆனாலும் தனது சம்பளத்தை ஆர்யா உயர்த்தி உள்ளார். ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் சிக்கி சின்னா பின்னமாக ஆகிறார்களாம்.

Also read: மாரி செல்வராஜ் கையில் இருக்கும் 4 படங்கள்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள தனுஷின் படம்

ஜீவா : நடிகர் ஜீவா கடந்த சில வருடங்களாக ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லா படங்களுமே படுமோசமான தோல்வியை அடைந்து வருகிறது. ஜீவா இப்போது ஒரு படத்திற்கு 6 இருந்து 8 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.

விஷ்ணு விஷால் : விஷாலுக்கு எஃப் ஐ ஆர் படம் ஓரளவு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியை கொடுத்தது. அதன் பின்பு கட்டா குஸ்தி படமும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலும் தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி உள்ளாராம்.

Also read: ரஜினியின் முழு நீள 6 காமெடி படங்கள்.. ஒரு மீசையை வைத்து தேங்காய் சீனிவாசனுக்கு பட்டைய போட்ட சூப்பர் ஸ்டார்

Trending News