நடிப்பை தாண்டி விவசாயம் செய்யும் 5 நடிகர்கள்.. ரஜினி கூப்பிட்டு பாராட்டிய கபாலி கிஷோர்

என்னதான் நடிகர்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் அவர்களுக்கு மன நிம்மதியும், நிறைவான வாழ்க்கையும் கொடுப்பது விவசாயம் தான் என்று பல நடிகர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள். அப்படி எந்தெந்த நடிகர்கள் விவசாயம் செய்து வருகிறீர்கள் என்பதை பார்க்கலாம்.

கருணாஸ்: இவர் நடிப்புடன் சேர்ந்து தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என நாம் அனைவருக்கும் தெரிந்தது அத்துடன் அரசியல்வாதியும் கூட. அப்படிப்பட்ட இவர் எவ்வளவு பணம் வந்தாலும் எந்த மாதிரி பதவி இருந்தாலும் கிடைக்காத மனநிறைவு விவசாயம் பண்ணுவதில் மட்டும்தான் இருக்கும் என்று விவசாயத்திலும் முழு ஆர்வம் காட்டி வருகிறார். 14 ஏக்கரில் தோட்டம் ஆரம்பித்து நாட்டு பசு, நாட்டுக்கோழி, நாட்டு நாய் போன்ற நமது பாரம்பரியத்தை காப்பாற்றி களத்தில் இறங்கி செய்வது மிகவும் மன நிறைவை கொடுக்கிறது என்று விவசாயம் செய்து வருகிறார்.

Also read: கருணாஸ் நடிப்பில் மறக்க முடியாத 6 படங்கள்.. நந்தா பட லொடுக்கு பாண்டி ஞாபகம் இருக்கா!

பிரகாஷ்ராஜ்: இவர் என்னதான் நிறைய படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சரியான ஹீரோ இவர்தான் என்று சொல்லும் படி விவசாயத்தில் முழு ஈடுபாடுடன் பாரம்பரியத்தை விட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்று பல விஷயங்களை செய்து வருகிறார். ஒரு விவசாய பண்ணையை ஆரம்பித்து அதை இயற்கை முறையில் மாடுகளுக்கு தீனி போட்டு செடி கொடி பழங்கள் போன்ற அனைத்தையும் குடும்பத்துடன் அழகாக பார்த்து வருகிறார்.

அருண்பாண்டியன்: இவர் ஊமை விழிகள், புரட்சிக்காரன், தேவன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர். பிறகு ஒரு நேரத்தில் சினிமாவையும் தாண்டி தனிப்பட்ட முறையில் நிம்மதியான வாழ்க்கையை தேட வேண்டும் என்பதற்காக ஒரு விவசாய தோட்டத்தை இயற்கைக்கு மத்தியில் ஆரம்பித்து இவருடைய குடும்பமாக முழுவதும் அதில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை இவருடைய மகள் மற்றும் அக்கா அனைவரும் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

Also read: பிரகாஷ்ராஜ் நடிப்புக்கு தீனி போட்ட 5 படங்கள்.. கொழுந்தியாளை அடைய நினைத்த ஆசை படம்

மம்முட்டி: மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கிறவர் தான் நடிகர் மம்முட்டி. இவர் நடிப்பதையும் தாண்டி அதிக அளவில் கொடுக்கும் விதமாக விவசாயத்தில் பயிரிட்டு வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி நிறைய தோட்டங்கள் ஆரம்பித்து செடி கொடி பழங்கள் போன்றவற்றைகளை பராமரித்து வருகிறார்.

கிஷோர் குமார்: பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள் அதிலிருந்து எப்படி புகழையும் பணத்தையும் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் ரொம்பவே வித்தியாசமானவர் தான் கிஷோர் குமார். சினிமாவின் நடிகர் என்கிற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் தோட்ட வேலையை பார்த்து இவர் இருக்கும் இடமெல்லாம் பசுமையான வயல்கள், பல மரங்கள், காய்கறிகள் போன்றவை பயிர் செய்து வருகிறார். அத்துடன் தோட்டத்திற்கு நடுவிலே ஒரு வீடையும் அமைத்து அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவருடைய நற்செய்திகளை பார்த்து ரஜினி இவரை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

Also read: நம்மளே ஒதுக்கிய 5 சூப்பர் கதாபாத்திரங்கள்.. இப்ப வர தலை தூக்க முடியாமல் தவிக்கும் யுத்தம் செய் ஜூடோஸ்