திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோ மெட்டீரியலுக்கான லுக் இல்லாத 5 நடிகர்கள்.. கொஞ்சம் கூட செட்டே ஆகாதுன்னு நினைத்த தனுஷ்

Not Hero Look Actors: எப்பொழுதுமே சொல்வாங்க ஆள பாத்து யாரையும் எடை போடக்கூடாது என்று. அது பல விஷயங்களில் நமக்கு புரிய வைத்திருக்கிறது. இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் ஒரு சில நடிகர்களை பார்த்ததும், இவர் பார்க்க ஹீரோ மாதிரியே இல்லை, இவர் எல்லாம் எப்படி படத்தில் நடிக்கிறார்கள் என்று பலரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் ஹீரோவாக முடியும் என்று வளர்ந்து வந்திருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதன்: இவர் இயக்கிய கோமாளி படத்தின் மூலம் ஒரு சீனுக்கு ஆட்டோ டிரைவராக வந்த இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன் பின் இவரிடம் இருக்கும் திறமையை வைத்து இவரையே இவர் வளர்த்துக் கொண்டார். அதனாலேயே இவர் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தில் இவரை தவிர வேற யாரு ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படம் வெற்றியடைந்திருக்காது என்று சொல்லும் படியாக வளர்ந்து காட்டி விட்டார். இதனை தொடர்ந்து ஹீரோவாக இவர் தான் நடிக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் இவரை தேடிக் கொண்டு வருகிறார்கள்.

Also read: கௌதம் மேனன் போல் பார்த்திபனையும் வச்சி செய்த பிரதீப்.. பதிலடி கொடுத்த நக்கல் மன்னன்

பிரபுதேவா: முதலில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான இவர், ஒரு சில பாடல்களில் இவரைத் தவிர வேற யாராலும் அந்த ஸ்டெப்பை போட முடியாது என்ற காரணத்தினால் இவரே அந்த பாடல்களில் ஆடினார். அதன்மூலம் சினிமாவிற்கு முகத்தை காட்டிய இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அப்பொழுது இவரெல்லாம் ஹீரோவா என்று பலரும் சொல்லிய நிலையில் என்னாலையும் முடியும் என்று இவருடைய திறமையால் ஹீரோவாகவும் சாதித்து விட்டார்.

பாண்டியராஜன்: ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்தார். ஆனால் இவருடைய உருவ தோற்றத்தை பார்த்து பலரும் கிண்டல் அடித்து இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதன்பின் வேறு யாரையும் நம்பாமல் இவரை இயக்கி ஹீரோவாக நடித்த படம் தான் ஆண்பாவம். இப்படத்தின் வெற்றி எப்படி இருந்தது என்றால் இவரை நக்கல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூப்பர் ஹிட் ஆனது.

Also read: சுந்தரம் குடும்பத்தில் முதல் பெண் வாரிசு.. 50 வயதில் அப்பாவான பிரபுதேவா

பார்த்திபன்: உதவி இயக்குனராக பணிபுரிந்த இவருக்கு நடிகராக வேண்டும் என்று ஆசை வந்ததால் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் இவரை இயக்கி நடித்த படம் தான் புதிய பாதை. முதலில் இவரெல்லாம் ஹீரோவா என்று கேலி செய்தவர்களுக்கு மத்தியில் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து இவருடைய வாழ்க்கையை தொடங்கிவிட்டார்.

தனுஷ்: இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. ஆனாலும் இவரை பார்த்து கேலி செய்யும்படியாக இவருடைய தோற்றம் இருந்தது. இவர் எல்லாம் ஹீரோவுக்கு செட்டே ஆகாது என்று நக்கல் செய்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து பெரிய ஹீரோவாக என்னால் வர முடியும் என்று விடாமுயற்சியுடன் அனைத்து தடைகளையும் தாண்டி தற்போது அனைவரது முன்னிலையிலும் வளர்ந்து நிற்கிறார்.

Also read: வேகம் எடுக்கும் தனுஷ் 50.. இவ்வளவு நடிகர்களா?. தெறிக்க விட்ட சம்பவம்

Trending News