ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தத்துரூபமா இருக்கனும் என உயிரைக் கொடுத்து நடிக்கும் 5 நடிகர்கள்.. ராஜா கண்ணாக ஜெயித்து காட்டிய மணிகண்டன்

தமிழ் திரையுலகில் ஆகசிறந்த நடிகர்கள் பலர் இருந்துவந்துள்ளனர். தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்ய இவர்கல் எந்த எல்லைக்கும் செல்வர். நடிகர் வி.கே.ராமசாமி, தங்கவேலு, பாண்டு, ராஜேஷ்,எம்.ஸ்.பாஸ்கர், மற்றும் பலர் தங்களது கால்தடங்களை தமிழ் திரையுலகில் ஆழமாக பதித்துள்ளனர். குணச்சித்திர வேடங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தங்களது திறமையை கொட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது மிகதிறமையான பலர் வந்துகொண்டிருக்கின்றனர். இதில் காலி வெங்கட், பசுபதி, ஜெயபீம் மணிகண்டன், முக்கியமானவர்கள். இவர்கள் தங்களது படத்திற்கு எவ்வளவு சிரத்தை எடுத்து ஒரு சாதாரண கதாபாத்திரத்தையும் பிரமாதமாக மாற்றியமைக்க கூடியவர்கள.

காளி வெங்கட்: தற்போது நடித்து வெளியான கார்கி, கட்டா குஸ்தி படம்வரை தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கைதட்டல்களை வாங்குவதில் கைதேர்ந்தவர். இவர் நடித்த சூரரைப் போற்று படம் ஒன்று போதும் இவரின் திறமையை பறைசாற்றும். இந்த படத்தில் மிகச்சிறந்த உடல் மொழியை அவர் கையாண்டிருப்பார் சில இடங்களில் நகைச்சுவை நெடி அடித்தாலும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நம்மை கலங்க வைத்திருப்பார் பல குணச்சித்திர நடிகர்கள் இருக்கும் போதிலும் தனது தெளிவான வசன உச்சரிப்பால் அனைவரையும் இருக்கக் கூடியவர்.

Also Read: பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

பசுபதி: தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாதையை அமைத்து இன்று வரை அந்த சாம்ராஜ்யத்தை தனது உடல் மொழியாலும் வசன உச்சரித்தாலும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த கலைஞன். பல படங்களில் இவர் வில்லனாகவும் சில வாய்ப்புகளில் தனது நகைச்சுவை திறமைகளையும் கொடுத்துள்ளார். இவர் நடித்த “வெயில்” படத்தில் இவரின் சிறந்த நடிப்பு திறமையை வெளிக் கொண்டு வந்திருப்பார். சமீபத்திய படமான சார்பட்டா பரம்பரையில் தனக்கு கொடுக்கப்பட்ட “ரங்கன்” வாத்தியாரின் கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு எவரும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. இந்த படத்தில் பசுபதி அவர்கள் இதுவரை தனது படங்களில் இல்லாத தனிப்பட்ட உடல் மொழியை தன் நடிப்பின் மூலம் கொடுத்திருப்பார் இவரின் நடிப்பாற்றல், பல திரைரசிகர்களின் உணர்ச்சியை தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஜெய்பீம் மணிகண்டன்: ஆகச்சிறந்த திரைப்பட குணச்சித்திர நடிகர்கள் தமிழ் திரையுலகில் பரவிக்கிடக்கின்றன. இதில் சமீபத்திய கண்டுபிடிப்பான “ஜெய்பீம் மணிகண்டன்” அவர்களின் வரவு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நடிகனாக வரவேண்டும் என்ற கனவோடு தனது திரைப் பயணத்தை ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக, ரேடியோ ஜாக்கி ஆகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்துள்ளார். இவர் நலன் குமாரசாமி அவர்கள் இயக்கத்தில் “காதலும் கடந்து போகும்” என்கிற படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார்.

Also Read: ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

பல படங்களில் சிறிய கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபிக்க தவறியதில்லை. சமீபத்திய திரைப்படமான ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு என்கிற பழங்குடி மனிதனின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். பல இடங்களில் இவர் மேல் விழும் ஒவ்வொரு அடியும் பார்ப்பவர்களுக்கு வலி ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சமயத்தில் தனது மனைவி செங்கேணி இடம் தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி கெஞ்சும் பொழுது நம் மனம் கனக்கிறது. மணிகண்டனின் திரைப்பயணத்தில் ஜெய் பீம் அவருக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.

லால்: நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பட விநியோகிஸ்தர், என பல பரிமாணங்களை மலையாள திரையுலகில் காட்டியவர். தமிழ் திரையுலகிற்கு “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் அறிமுகமானார். மிகச்சிறந்த வெற்றிப்படமான “சண்டைக்கோழி” படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர் சமீபத்திய திரைப்படமான பொன்னியின் செல்வன் வரை தனது நடிப்பாற்றலை நிரூபித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான “கர்ணன்” திரைப்படத்தில் ஒரு வயதான முதியவர் கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார் படத்தில் பல இடங்களில் இவரது நடிப்பு மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும். கோபம், ஆற்றாமை, பாசம், காதல், போன்ற உணர்ச்சிகளை மிகவும் தத்துரூபமாக கையாண்டிருப்பார் பல படங்கள் இவர் நடித்து வந்திருந்தாலும் “கர்ணன்” இவருக்கு மிகபெரிய கௌரவத்தை கொடுத்திருக்கிறது.

சபீர் கல்லரக்கல்: சமீபத்திய அறிமுகமான இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் மேடை நாடக கலைஞராக பணியாற்றியவர் ‘நெருங்கி வா முத்தமிட’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பேட்டை, அடங்கமறு போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். தனது நடிப்புத் திறமையின் முழு பரிணாமத்தை ஏதாவது ஒரு தருணத்தில் வெளிப்படுத்த வேண்டுமென கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு வாய்த்த மிகப்பெரிய கதாபாத்திரம் சார்பட்டா படத்தில் “டான்சிங் ரோஸ்”.

ஒரு திரைக்கலைஞன் தன்னுடைய திரைப் பயணத்தை வெகு நேர்த்தியாக கொண்டு செல்லவேண்டும் என்ற முயற்சியில்அவருக்கு கிடைத்த மிக அரிய வாய்ப்பு. படத்தின் அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும், மற்றவரின் திறமையை தன்னுடைய நடிப்பாற்றல் மூலம் அடித்து நொறுக்கியவர். இன்னும் 50 வருடங்களுக்கு இந்த கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் பேசுபொருளாக இருக்கும். இதை தக்க வைக்கும் முயற்சியில் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் இவரது நடிப்பாற்றல் அனைவராலும் ஈர்க்கப்பட்டு இருக்கிறது.

Also Read: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடசென்னை ராஜன், டான்சிங் ரோஸ்.. கல்லா கட்ட போகும் பா ரஞ்சித், வெற்றிமாறன்

தனக்கென எந்த எல்லைகளும் வகுக்காமல் கிடைத்த கதாபாத்திரங்களை தங்களது நடிப்பு திறமை மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இந்த குணச்சித்திர நடிகர்கள் ஆகச்சிறந்த படைப்பாளிகள். இவர்கள் அனைவரும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாதவர்கள்!

Trending News