புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வயசுலாம் ஒரு மேட்டரே இல்ல என திருமணம் செய்த 5 நடிகர்கள்.. 33 வயது பொண்ணுடன் ஆட்டம் போடும் பப்லு

பிரபலங்களின் திருமணம் என்றாலே அதற்கு எதிர்பார்ப்பு அதிகம். ஆனால் தற்போது வயது வித்தியாசம் பார்க்காமல் நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கேலிக்கூத்தாய் அமைந்து வருகிறது. முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் தனக்கு ஏற்ற துணையை தேடிக் கொள்ளும் இவர்கள் மறுபுறம் இவர்கள் நடந்து கொள்வது அநாகரிகத்தை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ரெண்டு புருஷனை கட்டின பின் ஆண்களையே வெறுத்த நடிகை.. கடைசியில் எழுதிய அதிர்ச்சியான உயில்

ஆர்யா-சாயிஷா: 2018ல் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கஜினிகாந்த். இப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடியாக நடித்திருப்பார்கள். அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தின் போது சாயிஷா-21 மற்றும் ஆர்யா- 38 . சுமார் 17 வயது வித்தியாசத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்திவிராஜ்-ஷீத்தல்: பிரபல நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தனது 57வது வயதில் ஷீத்தல் என்னும் 24 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சுமார் 33 வயது வித்தியாசத்தில் இது போன்ற திருமணத்தை பலர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுபோன்ற தப்பான வழிகாட்டுதலை மேற்கொள்ளும் பிரபலங்களை சாடும் விதமாக இவரின் செயல் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து இவர்கள் செய்யும் அட்டூழியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read: என் பொண்டாட்டி நடிச்சதிலேயே எனக்கு புடிச்ச படம் இதுதான்.. உலக அழகி நடிப்பில் மயங்கிய பச்சன்

வேலு பிரபாகரன்-ஷெர்லி: பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான வேலு பிரபாகரன், 60 வயதில் தன் படத்தில் நடித்த நடிகை ஆன ஷெர்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 30 வயது வித்தியாசத்தில் மேற்கொண்ட திருமணத்தை கண்டு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வயதான நிலையில் இவர் செய்த காரியம் வளரும் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக இருந்து வருகிறது.

பிரகாஷ் ராஜ் -போனி வர்மா: 2010ல் பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ், போனிவர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்த பிரகாஷ்ராஜ் தன் 45 ஆவது வயதில் இவரை மணந்து கொண்டார் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

ஆஷிஸ் வித்யார்த்தி-ரூபாலி: தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்பு ஆசிஸ் வித்யார்த்தி தன் 60 வயதில், 50 வயது நிறைந்த ரூபாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற இவர்கள் இருவரின் திருமணம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது போன்ற திருமணங்களை பிரபலங்கள் செய்து வருவது வழக்கமாகி வருகிறது.

Trending News