வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சமீபத்தில் அசுர வளர்ச்சி அடைந்த 5 நடிகர்கள்.. கமல் வரை கூப்பிட்டு பாராட்டிய குறட்டை மன்னன்

5 Actors: ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து புதுமுகமாய் பார்க்கப்பட்டாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிக்காட்டி மக்களின் அபிமானத்தைப் பெற்று அசுர வளர்ச்சியாய் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வரும் 5 நடிகர்கள் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

கவின்: சீரியல் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராய் அறிமுகமானவர் கவின். தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்று துணை கதாபாத்திரங்களில் அசத்தி வந்த இவர் ஹீரோவாய் மேற்கொண்ட படம் தான் லிஃப்ட் இப்பட வெற்றிக்கு பிறகு தந்தை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாய் இவர் மேற்கொண்ட டாடா படம் மிகுந்த வெற்றியை பெற்று தந்தது.

Also Read: 17 வயது நடிகையை நான்காவது திருமணம் செய்த ரஜினி பட நடிகர்.. அப்பாவை விட மூத்தவரை கல்யாணம் பண்ணிய நடிகை

மணிகண்டன்: விஜய் டிவி, நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராய் அறிமுகமானவர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தனக்கான அங்கீகாரத்தை பெற முயற்சித்து வந்த இவர் ராஜாகண்ணு என்னும் கதாபாத்திரத்தில் மேற்கொண்ட படம் தான் ஜெய் பீம். இப்பட விமர்சனத்திற்கு பிறகு ஹீரோவாய் களமிறங்கிய இவர் குறட்டை மன்னனாய் கமலின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்த் ரவி: பன்முகத் திறமை கொண்ட இவர் நடிக்கும் ஆர்வத்தால் தமிழ் சினிமாவில் மேற்கொண்ட படம் தான் தரமணி. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து திகில் ஊட்டும் அஸ்வின் படத்தில் இவரின் நடிப்பு பெரிதாக பார்க்கப்பட்டது. மேலும் தற்பொழுது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாய் பட்டையை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திரும்பத் திரும்ப விஜய்யை வெறுப்பேத்த அனிருத் செய்த மட்டமான காரியம்.. காசு கொடுக்கிற முதலாளிக்கே ஆப்பா!

காக்கா முட்டை ரமேஷ்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி மேற்கொண்ட முதல் படத்திலேயே வெற்றியை பெற்றார். அதைத்தொடர்ந்து தன் அடுத்த கட்ட படங்களை வெப் சீரிஸ் வாயிலாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் பிரதாப்: தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களை மேற்கொண்டு வந்த இவர் 2021ல் சார்பட்டா பரம்பரை என்னும் படத்தில் தன் பாக்ஸிங் திறமையை வெளிக்காட்டி இருப்பார். அதை தொடர்ந்து சில படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று தெறிக்கவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மரண படுக்கை வரை கமலுடன் சேர்ந்து நடிக்காமல் போன நடிப்பு அரக்கன்.. நாயகனில் வாய்ப்பு கிடைத்தும் மறுத்த காரணம்

Trending News