திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

Five Actors Carrier Closed: பொதுவாகவே பெரிய நடிகர்களுடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்து விட்டால் நம்முடைய இமேஜ் கூடுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த ட்ரிக்ஸ் எல்லாத்துக்கும் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். அதிலும் விஜய் உடன் நடித்து விட்டால் அவர்கள் சினிமா கேரியரை மறந்திட வேண்டியதுதான். ஏனென்றால் விஜய்யுடன் நடித்து விட்டால் அவர்களுடைய சினிமா கேரியர் முடிந்துவிடும். அப்படி விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த ஐந்து நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

சாந்தனு: இவருடைய அப்பா பேரும் புகழையும் சம்பாதித்ததில் கால்வாசி கூட இன்னும் இவர் எட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரிடம் என்னதான் ஹீரோக்கான மெட்டீரியல் லுக் இருந்தாலும் இவரால் வளர முடியவில்லை. இதனால் இவரை தேடி வரும் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்றால் சொல்லவா செய்யணும். அப்படித்தான் மாஸ்டர் படத்தில் ஆசையுடன் விஜய் கூட நடித்தார். ஆனால் அதன் பின்பு சேர்த்து வைத்த கொஞ்ச நெஞ்ச கேரியரும் போய்விட்டது.

Also read: 6 கோடி பட்ஜெட் படத்திற்கு லட்சக்கணக்கில் மட்டுமே வசூல்.. எழ முடியாத அளவுக்கு அடிவாங்கும் சாந்தனு

அர்ஜுன் தாஸ்: இவர் தமிழில் மிகவும் பிரபலமாகி ரசிகர்களிடம் வரவேற்கப்பட்ட கதாபாத்திரம் தான் கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டர். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிடித்தமான வில்லன் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி விட்டார். இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் தாஸ் என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் இவர் பக்கம் திருப்பி விட்டார். இதன் மூலம் தொடர்ந்து பட வாய்ப்பை பெற்று பேரும் புகழையும் அடைவார் என்று எதிர்பார்த்த நிலையில், விஜய்யுடன் நடித்தால் அதோடு சோலி முடிந்து விட்டது என்பதற்கு ஏற்ப இவரோட கேரியர் கேள்விக்குறியாகி நிற்கிறது.

கதிர்: இவர் மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, ஏதோ இவரைத் தேடி வந்த பட வாய்ப்பை சரிவர நடித்துக் கொடுத்து மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகராக வலம் வந்தார். அதன் பின் பிகில் படத்தில் விஜய் கூட நடித்த பின்பு இவருக்கு பெருசா சொல்லும் படியாக எந்த வாய்ப்பும் வராமல் தவியாய் தவித்து கொண்டு வருகிறார்.

Also read: விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட 6 நடிகர்கள்.. மிரட்டியே வாய்ப்பை அள்ளிய அர்ஜுன் தாஸ்

ஷியாம்: இவர் 2000-இல் இருந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து சாக்லேட் பாயாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் இவர் நடிக்கக் கூடிய படங்கள் கம்மியாக இருந்தாலும் ஒரு ஹீரோ என்ற இமேஜ் ரசிகர்களிடம் இருந்தது. அதை கெடுக்கும் விதமாக வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்து மொத்தத்தையும் கெடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணன், சித்தப்பா கேரக்டருக்கு மட்டும் தான் இவரை கூப்பிடுகிறார்கள்.

செல்வராகவன்: இவர் இயக்குனராக சினிமாவிற்கு நுழைந்தாலும் அதை நன்றாகவே செய்து மக்கள் மனதில் இவருக்கான இடத்தை பிடித்து விட்டார். அதிலும் இவர் இயக்கிய படங்களான அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் சினிமாவிற்கு தன்னுடைய முகத்தை காட்ட வேண்டும் என்ற ஆசையில் இவருக்கு இவரே ஆப்பை தேடிக்கொண்டார் என்றே சொல்லலாம். அதாவது விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்ததில் இருந்தே இவருடைய எந்த படங்களும் ஓடவே இல்லை. தற்போது தட்டு தடுமாறி வெற்றியை பார்ப்பதற்கு போராடிக் கொண்டு வருகிறார்.

Also read: அதிர்ச்சி தரும்படி விலை மாதுவாக நடித்த 6 நடிகைகள்.. சினேகாவையே அந்தரங்க தொழிலாளியாக ஆக்கிய செல்வராகவன்

Trending News