செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பல கெட்டப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றுவரை அஜித் பெயரை காப்பாற்றும் மாஸ் கதாபாத்திரம்

என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில கதாபாத்திரம் மட்டுமே மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது. மேலும் அத்தகைய கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டே அப்படங்களை நினைவுக் கொள்கின்றனர்.

மேலும் படங்களில் அதிக கெட்டப்பில் எழும் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை முழு மனதாய் ஏற்று நடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அவ்வாறு பல கெட்டப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: நன்றி மறந்து தூக்கி எறிந்த விஜய்.. உதவி கேட்ட விஜயகாந்துக்கு எள்ளளவும் மனம் இறங்காத இளைய தளபதி

சிவாஜி கணேசன்: 1964 சிவாஜியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியான படம் தான் நவராத்திரி. இது சிவாஜி கணேசனுக்கு நூறாவது படம் ஆகும். இப்படத்தில் இவர் ஒன்பது ரசங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இப்படம் 100 நாளைக்கு மேல் ஓடு பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது.

கமலஹாசன்: 2018ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 10 மாறுபட்ட வேடங்களில் கமலஹாசன் நடித்து வெற்றி கண்ட படம் தான் தசாவதாரம். இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சுனாமியோடு தொடர்பு படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படத்திற்கு சுமார் 60 கோடி செலவிடப்பட்டது. அதை தொடர்ந்து 200 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்த இப்படம் கமலுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது.

Also Read: ஒரு நிலையில் இல்லாத விடா முயற்சி.. விடாத பணத்தாசையில் எல்லாத்தையும் இழக்கும் அஜித்குமார்

அஜித்: 2001ல் கே எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் சிட்டிசன். அத்திப்பட்டி என்னும் ஒரு கிராமத்தின் அடையாளத்தை இழந்த மக்களின் துயரத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அஜித்தின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். அஜித்தின் பெயர் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

விக்ரம்: 2022ல் அஜய் கனகமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கோப்ரா. இரட்டை கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் விக்ரம். இப்படத்தில் இவரின் நடிப்பு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது. மேலும் மக்களை பூர்த்தி செய்யும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.

Also Read: மாஸ் ஹீரோ லுக்கில் மாறிய சமூக பாண்டியன்.. அப்பா கேப்டனை தூக்கி நிறுத்த போராடும் மகன்

சூர்யா: 2009ல் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அயன். மேலும் போதைப்பொருளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருக்கும். இப்படத்தில் சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு இவருக்கு அடுத்தக் கட்ட பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

Trending News