வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் மிரட்டுய 5 நடிகர்கள்.. அதிலும் சார்பட்டா ரங்கன் வாத்தியாரே அடிச்சுக்க ஆளே இல்ல

கோலிவுட்டில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகிகளை விட ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களும் வலுவாக பேசப்பட வேண்டும். அப்படி தமிழ் சினிமாவில் கம்பீரத்தை விட்டுக் கொடுக்காமல் மிரட்டிய 5 நடிகர்களை இன்றும் ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர். அதிலும் கபிலனின் குத்துச்சண்டை பயிற்சியாளர் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியை அடிச்சுக்க ஆளே இல்லை.

வேலா ராமமூர்த்தி: கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை ரசித்துப் பார்க்கும் சினிமா பிரியர்களுக்கு நடிகர் வேல ராமமூர்த்திக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கும், இவர் கொம்பன் படத்தில் துரைப்பாண்டி, என் ஜி கே படத்தில் சகாயம், புலிக்குத்தி பாண்டி படத்தில் சன்னசி தேவர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கம்பீரமாக நடித்து அசத்திருப்பார்.

கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் மிரட்டும் வேலா ராமமூர்த்தி

vela-ramamoorthy-cinemapettai
vela-ramamoorthy-cinemapettai

Also Read: எந்த கதாபாத்திரம் நாளும் வாழ்ந்து காட்டிய 7 நடிகர்கள்.. எம்எஸ் பாஸ்கரை ஓவர்டேக் செய்த நடிகர்

ராஜ்கிரண்: தமிழில் 25 படங்களுக்கு மேல் நடித்து சில படங்களையும் தயாரித்து இயக்கிய இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் தனக்கே உரித்தான கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் அசத்தும் கதாபாத்திரங்களில் மிகக் கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கிறார். கொம்பன், ரஜினி முருகன், பா பாண்டி, சண்டக்கோழி 2 போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார்.

ஹரிஷ் உத்தமன்: தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாண்டிய நாடு, கௌரவம், மீகாமன் போன்ற படங்களில் மிரட்டி விட்டிருப்பார்.

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டும் ஹரிஷ் உத்தமன்

harish-cinemapettai
harish-cinemapettai

Also Read: பசுபதி நடிப்பில் மறக்க முடியாத 6 கதாபாத்திரங்கள்.. முருகேசனாய் கண்ணீர் விட வைத்த தியாகம்

கிஷோர் குமார்: தென்னிந்தியாவின் பிரபல நடிகரான இவர் 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, விசாரணை, ஆடுகளம், வடசென்னை போன்ற வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை கோலிவுட்டில் பிடித்தார். அத்துடன் சமீபத்தில் வெளியான பேட்டை காளி படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்க கூடியதாக இருந்தது.

கம்பீரமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிக்கும் கிஷோர் குமார்

kishore-cinemapettai
kishore-cinemapettai

பசுபதி: தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் பசுபதி, டாப் ஹீரோக்களுக்கு வில்லனாகவும் மிரட்டி இருப்பார். அதுமட்டுமல்ல சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யாவிற்கு குத்துச்சண்டை பயிற்சியாளராக ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராகவே மாறிவிட்டார். இதில் இவரது கம்பீரம் துளிகூட குறையாமல் கெத்து காட்டி இருப்பார்.

Also Read: பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் ஹீரோக்களுக்கு நிகராக தங்களுக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டது மட்டுமல்லாமல், அவர்கள் நடிக்கும் படங்களில் கம்பீரத்தை விட்டுக் கொடுக்காத நடிகர்கள் என்ற பெயரையும் வாங்கினார்கள்.

- Advertisement -spot_img

Trending News