சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

டீட்டோடேலராக வாழ்ந்த 5 நடிகர்கள்.. நிஜத்தில் ஹீரோ என நிரூபித்த நம்பியார்

சினிமாவில் சில நடிகர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பட வாய்ப்புகளை இழந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமாவில் டீட்டோடேலராக வாழ்ந்த 5 நடிகர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

நம்பியார் : சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் கொடூர வில்லன் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது நம்பியார் தான். இவர் படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாகத்தான் வாழ்ந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் சுத்தமாக பிடிக்காத ஒன்றாம்.

Also Read :ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த முதல் 5 படங்கள்.. சிவாஜி, கமலால் கிடைத்த கெளரவம்

அசோகன் : எழுபதுகளில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற டாப் நடிகர்களின் படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தார் அசோகன்.இவரும் படத்தில் தான் வில்லனே தவிர நிஜத்தில் குடிபழக்கம், புகைபிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களை வெறுத்து ஒதுக்குபவராம்.

ஜெய்சங்கர் : ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த அதன்பின்பு வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் ஜெய்சங்கர். எம்ஜிஆரின் விசுவாசியான இவருக்கு குடிப்பழக்கம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். அதே போல் மற்ற கெட்ட பழக்கங்களும் இவருக்கு கிடையாதாம்.

Also Read :எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

சிவகுமார் : நடிகர் சிவகுமார் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இவருடைய படத்தில் இடம் பெற்ற தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி பாடல் மிகவும் பிரபலமானது. இந்த படத்தில் இவர் குடித்து விட்டு ஆடுவது போன்ற காட்சி இருந்தாலும் நிஜவாழ்வில் இவர் ஒரு டீட்டோடேலராக வாழ்ந்துள்ளார்.

பிரசன்னா : நடிகர் பிரசன்னா ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடாததால் தற்போது வில்லனாக பல படங்களில் மிரட்டி வருகிறார். புன்னகை இளவரசி சினேகாவை பிரசன்னா திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பிரசன்னாவுக்கு குடி போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாதாம்.

Also Read :சிவகுமார் குடும்பத்தையே வச்சு செய்த வெங்கட்பிரபு.. ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி

Trending News