வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வில்லனாக நடித்து பல கோடி சொத்து சேர்த்த 5 நடிகர்கள்.. விஜயகாந்தின் 50வது படத்தில் இணைந்த வில்லன்

5 Villains Property Value: நல்லதுக்கு காலமில்லை என்ற சொல்லுக்கு ஏற்ப தற்போதைய படங்களில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை விட வில்லன்களின் மவுசு தான் அதிகரித்துக் இருக்கிறது. முக்கியமாக ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதில் வில்லனின் நடிப்பு தூக்கலாக இருந்தால் மட்டுமே அந்தப் படம் மக்களிடம் ரீச் ஆகிறது. அந்த வகையில் வில்லன்களாக நடித்து பல கோடிக்கு சொத்துக்களை சம்பாதிக்கும் அதிபதியாக மாறிவிட்டார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆஷிக் வித்யார்த்தி: தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் அனைத்து மொழிகளிலும் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தமிழில் தில் படத்தில் டிஎஸ்பி சங்கர் என்னும் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ஆக நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சயமாக மாறினார். இதனைத் தொடர்ந்து பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் போன்ற ஏகப்பட்ட படங்களில் நடித்து சிறந்த வில்லன் என்கிற அங்கீகாரத்தை பெற்றார். அப்படிப்பட்ட இவர் ஒரு படத்திற்காக 2கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவரிடம் மொத்தமாக 84 கோடி அளவில் சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழிகளில் ஹீரோவாகவும், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமாகி இருக்கிறார். முக்கியமாக இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து சிறந்த வில்லன் என்கிற அந்தஸ்தை பெற்று இவருக்கென்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் வில்லன் கேரக்டருக்கு வாங்கிய சம்பளம் 3 கோடி. ஆக மொத்தத்தில் இவரிடம் இருக்கக்கூடிய மொத்த சொத்தின் மதிப்பு 42 கோடிக்கும் மேல் இருக்கிறது.

Also read: பிரகாஷ் ராஜ் அப்பாவாக நடித்து சக்ஸஸ் ஆன 5 படங்கள்.. மறக்க முடியாத பவர்புல் கேரக்டர்ஸ்

முகேஷ் ரிசி: தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல மொழிகளில் வில்லனாக நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் தமிழில் சிங்கம் 2, வல்லரசு படத்தில் தீவிரவாதியாக நடித்திருக்கிறார். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 50வது படமான ரமணா படத்திலும் நடித்திருக்கிறார். இவரிடம் இருக்கும் சொத்து மதிப்பு 41 கோடி. முக்கியமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வில்லன் கதாபாத்திரம்தான். இதில் நடித்து ஏகப்பட்ட சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

அசுதோஷ் ராணா: இவர் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானவர். அப்படிப்பட்ட இவர் தமிழில் வேட்டை என்கிற படத்தில் அண்ணாச்சியாக அறிமுகமாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து மீகாமன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஜானி, சங்க தமிழன் போன்ற பல படங்களில் நடித்து சிறந்த வில்லன் என்கிற முத்திரையை பதித்து விட்டார். இவரிடம் இருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 55 கோடி.

ராணா டகுபதி: தெலுங்கு படங்களில் எந்த அளவிற்கு ஃபேமஸ் ஆகி இருக்கிறாரோ, அதே மாதிரி பாகுபலி படத்தில் நடித்தது மூலம் தமிழில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பெங்களூர், பாகுபலி 2, காடன், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும் இவருடைய முக்கியமான கதாபாத்திரமே நெகட்டிவ் ரோலில் நடிப்பதுதான். அப்படி இவர் நடிக்கும் ஒரு படத்திற்கு அதிகபட்ச சம்பளமாக 5 கோடி வரை வாங்குகிறார். அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு 40 கோடிக்கு மேல் இருக்கிறது.

Also read: வாயால் வாழ்ந்துகெட்ட 5 நடிகைகளின் சோகக் கதை.. விவாகரத்தே மேல் என பிடித்ததை விட மறுத்த அமலாபால்

Trending News