எந்த கெட்டப்பை கொடுத்தாலும் அதை உள்வாங்கி நடிக்கும் கலைஞனே சினிமாவில் அங்கீகாரம் பெறுகின்றனர். இது போன்ற கலைஞர்கள் தன் கதாபாத்திரத்தால் மக்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள்.
தன்னில் இருக்கும் பன்முக திறமைகளை கொண்டு ரசிகர்களின் ஆதரவை பெறுகின்றனர்.மேலும் இவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, சினிமாவில் ஆல்ரவுண்டராக வலம் வந்த 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.
எம் எஸ் பாஸ்கர்: இவர் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலும் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் இடம் பெற்றிருப்பார். குரு என் ஆளு என்னும் திரைப்படத்தில் விவேக்கிற்கு இணையாக இவரின் காமெடி மக்கள் நெஞ்சில் நீங்காத ஒன்றாகும். மேலும் சபாபதி என்னும் நகைச்சுவை படத்தில் சந்தானத்தின் பொறுப்பான அப்பாவாக சிறப்புற நடித்திருப்பார். மேலும் பல பிரபலங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசர்: 80- 90களில் சிறந்த வில்லனாக ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்தவர். அதிலும் குறிப்பாக இவர் நாயகன் படத்தில் நேர்மை தவறாத போலீஸ் அதிகாரியாக இடம் பெற்றிருப்பார். அதை தொடர்ந்து மூக்கன் கதாபாத்திரத்தில் மகளிர் மட்டும் என்னும் படத்தில் பெண்களுக்கு இடையூறு கொடுப்பது போன்று நடித்திருப்பார். அதன்பின் எம்டன் மகன் படத்தில் ஒரு கண்டிப்பான அப்பாவாகவும் கலக்கி இருப்பார். மேலும் பாகுபலி போன்ற படங்களில் மூர்க்கசுபாவத்தில் வில்லனாகவும் இடம் பெற்றுள்ளார்.
Also Read: ரகுவரனின் 15 வது நினைவு நாள்.. வேதனையுடன் ரோகினி போட்ட ட்விட்
மணிவண்ணன்: பன்முக திறமைகள் கொண்ட இவர் படங்களை இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் எதார்த்தமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர். மேலும் மாமன் மகள் படத்தில் இவரின் நகைச்சுவையில் இடம்பெறும் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக தன் மனைவிக்கு அடிபணிந்து நடக்கும் கணவனாக அசத்திருப்பார். அதைத்தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன்பின் சிவாஜி படத்தில் ரஜினிக்கு அப்பாவாகவும், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் குடும்பத்தை ஒன்று சேர்க்கும் அப்பாவாகவும், சங்கமத்தில் சிறந்த கலைஞன் ஆகவும் கலக்கி இருப்பார்.
ரகுவரன்: ஆல் ரவுண்டராக நம் நெஞ்சில் என்றும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். அவ்வாறு பார்க்கையில் சம்சாரம் அது மின்சாரம் என்னும் படத்தில் குடும்ப பொறுப்பை ஏற்க மறுக்கும் மகனாக நடித்திருப்பார். மேலும் பாட்ஷா படத்தில் இவரின் வில்லன் கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அதன்பின் முகவரி படத்தில் பாசமிகுந்த அண்ணனாகவும், யாரடி நீ மோகினி என்ற படத்தில் அன்பான அப்பாவாகவும் தன்னை நிரூபித்து இருப்பார்.
Also Read: ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை
தம்பி ராமையா: பல திறன் கொண்ட இவர் இப்பொழுது வரை சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்று வருகிறார். தன் நடை உடை பாவணையில் சிரிப்பை ஏற்படுத்தும் இவர் மக்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். அவ்வாறு சாட்டை என்னும் படத்தில் இடம்பெறும் இவர் மாணவர்களிடம் திமிர் பிடித்த ஆசிரியரைப் போல நடந்து கொள்வார். அதன்பின் கும்கி படத்தில் கொத்தளியாக இடம்பெறும் இவரின் நகைச்சுவை வேற லெவலுக்கு இருக்கும். மேலும் யானையோடு மல்லுக்கட்டும் இக்கதா பாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து வினோதய சித்தம் என்னும் படத்தில் கடமை தவறாக குடும்ப தலைவனாக அசத்திருப்பார்.