வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோடீஸ்வர பெண்களை வளைத்துப் போட்ட 5 நடிகர்கள்.. தளபதியை விட பெத்த கையாக இருக்கும் மாமனார்

5 Actors Who Married Billionaire Women: சினிமாவில் உள்ள நடிகர்கள் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும் குறிப்பாக சிலர் கோடீஸ்வரர் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிடித்தாலும் புளியங்கொம்பாய் பிடித்த 5 நடிகர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆனாலும் இவர்கள் பணத்தைப் பார்க்காமல் மனதை பார்த்து தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

விக்ரம் பிரபு : சிவாஜி வீட்டு குடும்பம் என்றால் சாதாரண வீட்டு குடும்பம் கிடையாது. அந்த வகையில் சிவாஜியின் பேரனும் மற்றும் பிரபுவின் மகனும் ஆன விக்ரம் பிரபு இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவாஜி குடும்பத்தை விட அதிக வசதியுடைய தொழிலதிபர் பெண்ணான லட்சுமி ஊதானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். விக்ரம் பிரபுவின் மனைவி பெயரில் நிறைய ஸ்கூல் மற்றும் காலேஜ் இருக்கிறதாம்.

Also Read : எப்படி போனேனோ அதேபோல திரும்பி வந்துட்டேன்.. 10 வருடத்திற்கு பின் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த விக்ரம் பிரபு

விஷ்ணு விஷால் : தயாரிப்பாளரின் மகனான விஷ்ணு விஷால் முதலில் தயாரிப்பாளர் பெண்ணான ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஜுவாலா குட்டா என்ற ஸ்போர்ட்ஸ் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார். இவரும் நல்ல வசதி வாய்ப்பு உடையவர் தான்.

செல்வராகவன் : இயக்குனரான செல்வராகவன் ஆரம்பத்தில் தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற நிலையில் கீதாஞ்சலி என்பவரை மணந்து கொண்டார். மேலும் கீதாஞ்சலியின் தாத்தா மற்றும் தந்தை இருவரும் ஜெனரல் ஆப் தமிழ்நாடு துறையில் அட்வகேட் ஆக பணிபுரிந்தவர்களாம்.

Also Read : 5 இயக்குனர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர்.. செல்வராகவன் படம் என்றாலே யுவன் இல்லாமல் எப்படி

ஆர்யா : சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்த போதும் மனம் ஒத்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சாயிஷா வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்ணாம். அவருடைய அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளர்.

விஜய் : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வசூல் கிங்கான இவர் தன்னுடைய ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அதற்கென்று சங்கீதாவும் சாதாரண வீட்டுப் பெண்ணல்ல. சங்கீதாவின் அப்பா லண்டனில் பெரிய இண்டஸ்ட்ரியல் ஓனர். நிறைய பிசினஸை கைவசம் வைத்துள்ளாராம்.

Also Read : லோகேஷ் ஆசையில் மண் அள்ளி போடும் விஜய்.. நானே ராஜா நானே மந்திரி என ஈகோவில் தளபதி போடும் ஆட்டம்

Trending News