திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அரசியல் மோகத்தால் நல்ல பெயரை கெடுத்துக் கொண்ட 5 நடிகர்கள்.. இதுல விஜய் என்ன கதியாகப் போறாரு!

5 political actors: திரையுலகத்தில் இருந்து ஒரு பிரபலமான நடிகர் அரசியல்வாதியாக இறங்குவது ஒன்றும் புதுசு அல்ல. எம்ஜிஆர் முதல் கமலஹாசன் வரை இதனுடைய பட்டியல் நீண்டு கொண்டே தான் வருகிறது. இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, நடிப்பையும் தாண்டி ஒரு அரசியல்வாதியாகவும் வெற்றி பெற்று விட்டார்கள்.

ஆனால் இவர்களை தொடர்ந்து அரசியல் மோகத்தால் நடிப்பை விட்டு உள்ளே நுழைந்தவர்கள் அவர்களுடைய பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சமாக இருக்கிறது. அந்த வகையில் ராமராஜன் கிராமக் கதையை மையமாக வைத்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

அதில் 1998 இல் ADMK கட்சியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதன் பின் இவரால் தொடர்ந்து வர முடியவில்லை. அத்துடன் சினிமாவிலும் காணாமல் போய்விட்டார். அடுத்ததாக கார்த்திக், நவரச நாயகன் என்ற பட்டத்துடன் காதல் மற்றும் ரொமான்ஸ் படங்களில் நடித்து பலரையும் கவர்ந்தார்.

அத்துடன் அரசியல் மீது இருந்த ஆசையால் ADMK கட்சியில் சேர்ந்தார். ஆனால் கடைசிவரை இவரால் வெற்றி பெற முடியாமல் இவருடைய ஆதரவை மட்டும் கொடுத்து வந்தார். அதன் பின் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழந்து வந்தார்.

அடுத்ததாக ஆக்சன் படங்களின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சரத்குமார். சினிமாவில் இருந்த பெயரை வைத்துக் கொண்டு அரசியலிலும் ஜெயித்து விடலாம் என்று நுழைந்தார்.

Also read: ராமராஜன் இயக்கி வெற்றி பெற்ற பொக்கிஷமான 5 படங்கள்.. கிராமத்து நாயகனாக ஜொலித்த மக்கள் நாயகன்

எப்பயாவது அரசியலில் ஒரு நல்ல இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ADMK மற்றும் DMK கட்சி என மாத்தி மாத்தி வேட்பாளராக வந்தார். கடைசியில் எதுவுமே செட்டாகவில்லை என்று தற்போது BJP கட்சியுடன் இணைய போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

அடுத்ததாக சென்டிமென்ட்க்கும் காதலுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை இயக்கி நடித்து வந்தவர் தான் டி ராஜேந்தர். இவரும் அரசியலில் ஒரு கை பார்த்து விடலாம் என்று இறங்கினார்.

ஆனால் கடைசியில் இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்த தான் மிச்சம். வந்த பாதை இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இவர்களை தொடர்ந்து கருணாஸ் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதே மாதிரி ADMK கட்சியில் நின்னு வெற்றியும் பெற்றார். இதனால் சினிமாவில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.

விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை

இதற்கு இடையில் விஜயகாந்த் மக்களின் ஆதரவுடன் அரசியலில் நின்னு இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கடைசியில் இவரால் முதலமைச்சராக ஆக முடியவில்லை. இருந்தாலும் நல்ல பெயருடன் மறைந்திருக்கிறார். இதே மாதிரி கமல் அரசியலில் நுழைவதற்கு ஆசைப்பட்டார். ஆனால் ஜெயிக்க முடியாமல் பல அசிங்கங்களை சந்தித்து தற்போது சினிமாதான் முக்கியம்னு போய்விட்டார்.

இதற்கிடையில் ரஜினி ரொம்பவே உஷாராகி இந்த சகவாசமே வேண்டாம் என்று தப்பித்துக் கொண்டார். ஆனால் தற்போது விஜய் முழு நம்பிக்கையுடன் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் கதி என்ன ஆகப்போகுதோ என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

Also read: ரிஸ்க் எடுக்க பயந்து வேண்டாம் என சொன்ன விஜய்.. வெங்கட் பிரபுவை துரத்தி விட்ட தளபதி

Trending News