திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எம்ஜிஆரை உயிர் மூச்சாய் நினைத்த 5 நடிகர்கள்.. செல்ல பிள்ளையாய் வலம் வந்த பாக்கியராஜ்

MGR-Bhagyaraj: சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி முத்திரை பதித்த எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் சினிமா பிரபலங்கள் பலரும் எம்ஜிஆரை தான் தங்கள் ரோல் மாடலாக வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட பிரபலங்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

அசோகன்: வில்லன் குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர் பேசும் வசனமும், உடல் மொழியும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். மேலும் இவர் எம்ஜிஆர் உடன் இணைந்து அரசிளங்குமரி குடும்பத் தலைவன், பணத்தோட்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் காரணமாகவே புரட்சித்தலைவர் மீது இவருக்கு இனம் புரியாத ஒரு அன்பு இருக்கிறது. அந்த வகையில் இவர் எம்ஜிஆரை தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்தார்.

Also read: அழகில் மயங்கி நடிகைகளை கல்யாணம் செய்த 5 இயக்குனர்கள்.. கில்லாடி வேலை பார்த்த விக்னேஷ் சிவன்

தேங்காய் சீனிவாசன்: நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் போன்ற பல கேரக்டர்களில் நடித்திருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் எம்ஜிஆர் உடன் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இன்றி எம்ஜிஆர் உடன் இவருக்கு நெருங்கிய நட்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ் எஸ் ராஜேந்திரன்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட இவர் எம்ஜிஆருக்கு சிறந்த நண்பர் ஆவார். அவருடன் இணைந்து ராஜா தேசிங்கு போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர் லட்சிய நடிகர் என்றும் அழைக்கப்பட்டார். முதலில் திமுகவில் இருந்த இவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக எம்ஜிஆர் உடன் இணைந்தார். அதன் பிறகு சிறிது காலத்திலேயே அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகிய இவர் எம்ஜிஆர் உடன் நல்ல நட்பில் இருந்தார்.

Also read: சிவாஜி, சரோஜா தேவியும் கோடியில் சம்பளம் வாங்கிய ஒரே படம்.. அதிகபட்சமாக வாங்கி கொடுத்த ரஜினி

சத்யராஜ்: வில்லனாக இருந்து ஹீரோவாக பல படங்களில் கலக்கிய சத்யராஜ் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகனான இவர் அதை வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல படங்களில் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். அந்த வகையில் எம்ஜிஆர் தான் தனக்கு எல்லாம் என்று இப்போது வரை இவர் வாழ்ந்து வருகிறார்.

பாக்யராஜ்: இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள இவர் எம்ஜிஆருக்கு செல்ல பிள்ளையாக வலம் வந்தவர். இன்னும் சொல்லப்போனால் புரட்சித்தலைவரே தன்னுடைய கலை வாரிசு இவர் தான் என்று அறிவித்தார். அந்த அளவுக்கு இவருக்கும் பாக்யராஜுக்கும் இடையேயான உறவு இருந்தது. அந்த வகையில் பாக்யராஜுக்கு எல்லாமும் ஆக இருந்தவர் எம்ஜிஆர் தான்.

Also read: மாதவன் சினிமாவை வெறுக்க காரணமாய் அமைந்த 5 படங்கள்.. நடிப்பே வேண்டாம் என துபாய் பறந்த மேடி

Trending News