வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த 5 நடிகர்கள்.. சந்தானத்தால் தலையில் துண்டு போட்ட விஜய் பட நண்பர்

தமிழ் சினிமாவில் மக்களுக்கு பரிச்சயமான நடிகர்களாக காணப்பட்ட சிலர் நடிப்பையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு திகழ்கின்றனர். அதிலும் தற்பொழுது மாஸ் ஹீரோக்களாக இருக்கக்கூடிய விஜய், அஜித்,  சூர்யா போன்றவர்களின் படங்களையே தயாரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த படங்களை காணலாம்.

தருண் கோபி : மக்கள் மத்தியில் குடும்பப்பாங்கான திரைப்படங்களின் மூலம் அறிமுகமானவர் தருண் கோபி. இவர் திரைப்பட இயக்குனர், வசன எழுத்தாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர். இவர் இயக்குனராக திமிரு, காளை போன்ற படங்களை தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக வலம் வந்தார். தொடர்ந்து கிராமப்புறங்களில் மையமாகக் கொண்டு எடுக்கும் குடும்ப பாங்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Also Read: 2023-இல் ஒரே நாளில் போட்டி போடும் 4 டாப் ஹீரோக்கள்.. மீண்டும் மோத தயாராகும் விஜய், அஜித்

ரமேஷ் கண்ணா : தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரமேஷ் கண்ணா தொடரும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதற்கு முன் பிரபல இயக்குனர்களாக இருக்கக்கூடிய விக்ரமன் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சிங்கம்புலி : இவர் இயக்குனராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகி பின் திரைப்படங்களில் காமெடி நடிகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ரெட் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மாயாவி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

Also Read: டைரக்ஷனில் இருந்து நகைச்சுவையில் குதித்த 5 பிரபலங்கள்.. இதில் தேசிய விருது பெற்ற நடிகர்

வெங்கடேஷ் : இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித் தெரு என்னும் படத்தில் கருங்காலி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவரானார் வெங்கடேஷ். இவர் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்னும் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.

ஸ்ரீநாத் : 2014 ஆம் ஆண்டு  சந்தானம் நடிப்பில் வெளியாகிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தினை விஜயின் நண்பர் ஸ்ரீநாத் அவர்கள் தயாரித்திருந்தார். பழிக்கு பழி வாங்க துடிக்கும் குடும்பத்தில் சிக்கி அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை பயமாக கொண்டு  இப்படமானது அமைந்துள்ளது. இந்த படத்தால் ஸ்ரீநாத்துக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது.

மாரிமுத்து : மாரிமுத்து புலிவால் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படம் நகைச்சுவை மற்றும் திகில் நிறைந்த திரைப்படம் ஆக அமைந்தது. தற்பொழுது இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும்  தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி கொண்டிருக்கிறார்.

Also Read: விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்.. அந்த மாதிரி கேரக்டர் வேண்டவே வேண்டாம்

Trending News