திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போதாது போதாது என சம்பாதித்ததை மொத்தமாக தொலைத்த 5 நடிகர்கள்.. தனக்குத்தானே குழி வெட்டிய ரஜினி

சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் அவர்களுடைய நடிப்பை மட்டும் கவனம் செலுத்தாமல் தயாரிப்பாளராகவும் வர வேண்டும் என்ற பேராசையில் நடிப்பின் மூலம் கிடைத்த பணம் போதாது என்று மொத்தத்தையும் தயாரிப்பில் போட்டு தொலைத்து விட்டார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட நடிகர்கள் தயாரித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

எஸ்ஜே சூர்யா: இவர் உல்லாசம் படத்தின் மூலம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததால் அஜித்திடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் ஒரு கதையை ரெடி பண்ணி அஜித்தை ஹீரோவாக வைத்து முதன்முதலாக இயக்கிய படம் தான் வாலி. இதன்பின் பல படங்களில் இயக்குனராகவும், நடிகராகவும் பயணித்து வந்த இவர் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் நியூ, அன்பே ஆருயிரே படத்தை தயாரித்தார். எப்படி நடிகராகவும், இயக்குனராகவும் பணத்தை சம்பாதித்தாரோ அதை தயாரிப்பாளராக ஆனபின் அந்த படங்களில் போட்டு மொத்தத்தையும் இழந்து விட்டார்.

Also read: லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

அதர்வா: இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன் போன்ற பல படங்களில் ஹீரோவாக எல்லாருடைய மனதிலும் பிரதிபலித்தார். பிறகு 2018 ஆம் ஆண்டு செம போத ஆகாத என்ற படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி அதர்வா நடிப்பில் வெளியானது. இந்த படத்தை இவரை தயாரித்து வெளியிட்டார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.

டி ராஜேந்தர்: இவர் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர். இவரது படங்கள் குடும்பப் படமாகவும், செண்டிமெண்ட் வைத்து எடுக்கக்கூடிய படமாகவும் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர். அடுத்து தயாரிப்பாளராக மோனிஷா என் மோனலிசா, காதல் அழிவதில்லை மற்றும் வீராசாமி போன்று எத்தனையோ படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் அதில் இவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய விதமாக அமைந்துதான் வீராசாமி. அதிலும் இப்படத்தில் இவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

Also read: முரட்டு காதலை சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த டி ராஜேந்தர்.. உருகி உருகி செதுக்கிய 5 படங்கள் 

அருண் பாண்டியன்: இவர் சினிமாவில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 80, 90களில் இவர் நடித்த படங்களான ஊமை விழிகள், இணைந்த கைகள், அசுரன், தேவன் போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமான நடிகராக வந்தார். அப்படிப்பட்ட இவர் தயாரிப்பாளராகவும் செந்தூரப்பூவே, காவியத்தலைவன், பேராண்மை, அங்காடித்தெரு, முரட்டுக்காளை போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் கடைசியாக தயாரித்த களவாடிய பொழுதுகள், ஜூங்கா இவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.

ரஜினி: இவருடைய நடிப்புக்கு ஈடு இணை கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவருடைய ஸ்டைல், டான்ஸ் போன்ற பல விஷயங்களை இவரை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அப்படிப்பட்டவர் இவர் 170 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். அத்துடன் தயாரிப்பாளராகவும் இவருடைய முத்திரையை பதிக்க வேண்டும் என்று வள்ளி மற்றும் பாபா போன்ற படங்களை தயாரித்தார். ஆனால் இதில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் இவருக்கு கைவந்த கலையாக இருக்கும் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கலாம். அதை விட்டு தயாரிப்பாளராக வேண்டுமென்ற ஆசையில் தனக்குத்தானே குழியை வெட்டிக் கொண்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ப்ரொடியூசராக மிகப்பெரிய நஷ்டத்தை பார்த்திருக்கிறார். ஆனாலும் இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வந்து விட்டார்.

Also read: ரஜினி, விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா.. பணத்தாசையால் ஷாரூக்கானிடம் சரண்டர்!

Trending News