திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தமிழில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் 5 நடிகர்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளும் நடிகர்

சினிமா பொருத்தவரை தெலுங்கு நடிகர்களுக்கு தமிழில் நடிக்கவும், தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கவும் மிகப்பெரிய ஆசையாக சுற்றி வருகிறார்கள். அதற்கேற்ற மாதிரி தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில ஹீரோக்கள் தமிழில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள். யாரெல்லாம் அந்த நடிகர்கள் தமிழில் ஆக்கிரமிக்க இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மகேஷ் பாபு: இவர் தெலுங்கு திரை உலகின் ரசிகர்களுக்கு பிரின்ஸ் நடிகராக இருக்கக்கூடியவர். இவர் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே சென்னையில் தான். ஆனால் நடிகராக காலடி எடுத்து வைத்தது தெலுங்கில். இப்படி இருக்கும் பொழுது என்னதான் நாம் நடிகராக வளர்ந்து புகழ் பெற்றாலும் அது நாம் பிறந்த ஊரிலேயே அந்த புகழை அடைய வேண்டும் என்பதுதான் எல்லாருடைய லட்சியமாக இருக்கும். அப்படித்தான் இவருக்கும் அந்த ஆசை ஏற்பட்டதால் தமிழில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால் இவர் தமிழில் நடித்த ஸ்பைடர் படத்தின் மூலம் தோல்வியை தான் பார்த்தார். ஆனாலும் விடாமுயற்சியுடன் தமிழில் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று கனவு கோட்டை கட்டி வருகிறார்.

Also read: அக்கட தேசப்படத்திற்கு ஆர்வம் காட்டி வரும் 5 நடிகர்கள்.. மொக்கை வாங்கிய பிரின்ஸ்

அல்லு அர்ஜுன்: தெலுங்கு முன்னணி நடிகராக அல்லு அர்ஜுன் பல வெற்றி படங்களை கொடுத்து மிகவும் பிரபலமாய் இருக்கிறார். இவர் அங்கே மட்டும் இல்லாமல் தமிழிலும் அதிக ரசிகர்களை கவர்ந்து விட்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் தர லோக்கல் ஆக நடித்திருந்தார். இப்படம் தமிழிலும் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது. இதன் தொடர்ச்சியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அத்துடன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வமாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் நேரடியாக தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் டப்பிங் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து வருகிறார்.

பிரபாஸ்: இவர் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆன ஹீரோவாக மாறிவிட்டார். அத்துடன் இவர் நடித்த முதல் பாகம், இரண்டாம் பாகம் வசூலில் எல்லையை மீறும் அளவிற்கு வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து தொடர்ந்து சாஹே, ராதேஷ்யாம் படங்களை டப்பிங் செய்து தமிழில் வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை ஏற்படுத்ததால் அடுத்து எப்படியாவது தமிழில் முத்திரை பதிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். அதிலும் எப்படியாவது விஜய் மற்றும் அஜித்தை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்று இருக்கிறார்

Also read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

நானி: இவர் தமிழில் நான் ஈ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். அதன் பிறகு முழுவதும் தெளிவு படத்தில் மட்டும் கவனத்திற்கு எடுத்து வருகிறார். ஆனாலும் இவருடைய மிகப்பெரிய ஆசையை தமிழில் எப்படியாவது முன்னணி நடிகர்களுக்கு இணையாக தன்னுடைய இடத்தை பதித்து விட வேண்டும் என்பது தான். ஆனாலும் சில தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அது எதுவும் சரியாக அமையாமல் போய்விட்டது. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் தமிழில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறார்.

நாக சைதன்யா: இவருடைய தாத்தா மற்றும் அப்பா தெலுங்கு மற்றும் தமிழில் நடித்து பேரும் புகழையும் வாங்கி விட்டார்கள். அதேபோல் தானும் அந்தப் புகழை அடைய வேண்டுமென்று மிக ஆசையுடன் இருந்தார். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்தவர் தான் தமிழ் இயக்குனரான வெங்கட் பிரபு. அதனால் மிக ஆசை ஆசையாக அவருடன் இணைந்து நடித்து வந்த படம் தான் கஸ்டடி. ஆனால் இந்த படம் மிகப்பெரிய அடிபட்டு விட்டது. இதனால் தளர்ச்சி அடையாமல் இன்னும் பல மடங்கு ஆவேசத்துடன் தமிழில் வெற்றி படத்தை கொடுக்க போராடுகிறார். இதற்கு பக்கபலமாக இவருடைய அப்பா நாகார்ஜுன் உதவி செய்து வருகிறார்.

Also read: எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் காலடியில் தான் இருக்கணும்.. ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டும் பாலா

- Advertisement -

Trending News