வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புகழின் உச்சிக்கு சென்ற பின் தலைமறைவான 5 நடிகர்கள்.. சாக்லேட் பாயாக வசியம் செய்த அப்பாஸ்

Five actors miss the carrier: சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ நடிகர்களுக்கு இடையே போட்டி அதிகமாக நிலவிக் கொண்டு வருகிறது. அந்தப் போட்டிக்கு நடுவில் ஒவ்வொருவரும் அவருடைய திறமையை காட்டி மேலோங்கி வருகிறார்கள். அந்த வகையில் சில நடிகர்கள் நடித்த படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பின் சினிமாவை விட்டு தலைமறைவாகி விட்டார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

மோகன்: 80களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இவருக்கான இடத்தை சினிமாவில் நச்சென்று தக்க வைத்துக் கொண்டவர். முக்கியமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் ஆகியிருக்கிறது. இவருடைய கால் சீட்டுக்காக இயக்குனர் முதல் தயாரிப்பாளர்கள் வரை தவமாக காத்துக் கொண்டிருந்த காலம் இருந்தது. அதிலும் இவர் மைக் பிடித்து பாட ஆரம்பித்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதில் இதமான ஒரு ராகத்தை கொடுத்திருக்கிறது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பையும், காதல் படங்களையும் நடிப்பதில் மிகக் கெட்டிக்காரர். இப்படி கொடிகட்டி பறந்தவர் திடீரென்று சில சர்ச்சைகளால் காணாமல் போய்விட்டார்.

Also read: 90ஸ் கிட்ஸை கதி கலங்க வைத்த 6 பேய் படங்கள்.. ரெண்டு நாள் காய்ச்சலில் அவஸ்தப்பட வைத்த மைக் மோகன்

ஜீவன்: இவர் நடித்த படங்கள் கொஞ்சமாகவே இருந்தாலும் அந்த படங்களின் மூலம் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தவர். முக்கியமாக இவருடைய வித்தியாசமான நடிப்பும், தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்படிப்பட்டவர் தொடர்ந்து சினிமாவில் தாக்கு பிடிக்காமல் நடிப்பதை விட்டு ஒரேடியாக போய்விட்டார்.

பிரஷாந்த்: இவர் 90ல் நடித்து வந்த நடிகர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்து முதல் இடத்தில் ஹீரோவாக வலம் வந்தார். அதிலும் இளசுகளின் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக இவருடைய சிரிப்பு மற்றும் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவர் தான் சினிமாவிற்கு வருங்கால டாப் ஸ்டார் என்று பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள். ஆனால் அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இவருடைய ஹீரோ இமேஜை டேமேஜ் செய்து விட்டார்.

Also read: பெண் ரசிகைகளால் அதிகமாக ரசிக்கப்பட்ட 6 நடிகர்கள்.. திருமணத்தால் ஹீரோவிலிருந்து ஜீரோவான பிரஷாந்த்

அங்காடித்தெரு மகேஷ்: இவர் நடித்த முதல் படமான அங்காடித் தெரு படத்தின் மூலம் இவருக்கு என்று சினிமா துறையில் ஒரு பெயரை தக்கவைத்துக் கொண்டார். இவருடைய நடிப்பு முகபாவனை கிராமத்து பையனாகவே அனைவரும் பார்க்கக் கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் இந்த படத்தின் மூலம் கிடைத்த புகழை வைத்து மென்மேலும் வளராமல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.

அப்பாஸ்: இவர் நடித்த முதல் படமான காதல் தேசம் படத்தின் மூலம் சாக்லேட் பாயாக அனைவரையும் வசியம் செய்தார். இதனை அடுத்து விஐபி, பூச்சுடவா, பூவேலி போன்ற படங்களில் மூலம் வெற்றியை பார்த்தவர். அத்துடன் இந்த படங்களின் மூலம் பேரும் புகழையும் சம்பாதித்தார். ஆனால் அதன் பின் கொஞ்ச காலங்களிலேயே சினிமாவை விட்டு தலைமறைவாகி போய்விட்டார்.

Also read: மாதவனுக்கு ஆப்பு வைத்த அப்பாஸ்.. கர்மா செய்த தரமான சம்பவம்

Trending News