திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மூட்டை மூட்டையாக காதல் கடிதத்தால் திக்கு முக்காடிய 5 நடிகர்கள்.. 43 வயதிலும் வசீகரிக்கும் பாகுபலி நாயகன்

Actor Prabhas: நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, அவர்கள் பெயரை பச்சை குத்திக் கொள்வது என ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வரும் நேரத்தில் இளம்பெண்களை கவர்ந்த ஹீரோக்களும் இருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு மூட்டை மூட்டையாய் காதல் கடிதங்கள் வந்து திக்குமுக்காடிய கதைகளும் உண்டு. அப்படி இளம் பெண்களை கவர்ந்த 5 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

அரவிந்த்சாமி: சுண்டினால் ரத்தம் வரும் கலர், ஆளை மயக்கும் அழகு என இருந்த இவர் இளம் பெண்களின் கனவு நாயகனாகவே இருந்தார். அதிலும் 90 காலகட்டத்தில் இவரைப் பார்த்து மயங்கி போன இளம் பெண்கள் இவர் மாதிரி தான் புருஷன் வேண்டும் என அடம் பிடித்த சம்பவங்களும் இருக்கிறது. தற்போது ரீ என்ட்ரியில் கலக்கி கொண்டிருக்கும் இவர் மேல் இன்னும் பல ரசிகைகள் க்ரஷ்-ல் தான் இருக்கின்றனர்.

Also read: ஹீரோவை விட சத்யராஜ் நின்னு பேசி சாதித்து காட்டிய 5 படங்கள்.. ரோசம் புடிச்ச சிவனாண்டி செஞ்ச அக்கப்போர்

அப்பாஸ்: ஒரு காலத்தில் சாக்லேட் பாய் ஹீரோவாக, ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்த இவர் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோ வாய்ப்புகள் குறையவே வில்லன் போன்ற வேடங்களில் நடித்து வந்த இவர் வாய்ப்பு கிடைக்காமல் டாய்லெட் விளம்பரங்களில் நடித்தார். தற்போது அதுவும் இல்லாமல் வெளிநாட்டில் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மாதவன்: சிரிப்பழகனாக இருந்த இவர் இப்போதும் கூட பல பெண்களின் ஃபேவரைட் ஹீரோ தான். அதிலும் இவர் நடிக்க வந்த சமயத்திலேயே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்ட பல ரசிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த அளவுக்கு தன் சிரிப்பால் பலரையும் சுண்டி இழுத்த பெருமை இவருக்கு உண்டு.

Also read: உண்மையான பெயரை வைத்து எழுதப்பட்ட 7 நடிகைகளின் பாடல்கள்.. தலைவர் ஜோடி போட்டு ஆடிய கொண்டையில் தாழம்பூ – குஷ்பூ

பிரபாஸ்: 43 வயதாகும் இந்த பாகுபலி நாயகனுக்கு தற்போது மூட்டை மூட்டையாய் காதல் கடிதங்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம். பல பெண்களும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இவருக்கு அப்ளிகேஷன் போட்டு வருகிறார்கள். ஆனாலும் இவர் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

சிம்பு: 40 வயதை கடந்திருக்கும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு சீரியல் நடிகை தர்ணா செய்த கதையும் உண்டு. அப்படி ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனான இவர் இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: சோதனையை முறியடித்து சாதனை கண்ட 6 இயக்குனர்கள்.. சாதியை வைத்து சட்டம் பேசும் மாரி செல்வராஜ்

இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களில் பாகுபலி நாயகனான பிரபாஸ் தன் வசீகரிக்கும் அழகால் நம்பர் ஒன்னில் இருந்தார். ஆனால் இப்போது அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருக்கும் அவர் சலார், ப்ராஜெக்ட் கே படங்களை தான் தான் முழுவதும் நம்பி இருக்கிறார்.

Trending News