மொழி அரசியலில் இதுவரை சிக்கிய 5 நடிகர்கள்.. மொத்தமாய் சரண்டர் ஆன ரஜினிகாந்த்!

Rajinikanth: கன்னட மொழி, தமிழ் வழியாக பிறந்தது என்று கமலஹாசன் சொன்ன ஒரு வார்த்தைக்காக மொழி பிரச்சனையே உருவாகும் அளவுக்கு கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன ஆனாலும் பரவாயில்லை என கமலஹாசனும் எதிர்த்து நிற்கிறார். தமிழ் சினிமாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. இதே போன்று கர்நாடகா அரசியலில் சிக்கிய நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

மொத்தமாய் சரண்டர் ஆன ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் காவிரி குடிநீர் பிரச்சினைக்காக நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தேசிய விஷயம் பெரிய அளவில் வைரலானது.

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்பவர்களை உதைக்க வேண்டாமா என்று கேட்டிருந்தார். இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்ப அந்த விஷயத்திற்காக மன்னிப்பும் கேட்டார்.

சத்யராஜ்: சத்யராஜ் கூட காவிரி குடிநீர் பிரச்சினைக்காக பேசிய விஷயம் தான் அவருக்கு எதிர்ப்பாக கிளம்பியது. பாகுபலி படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அந்த படத்தை சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சொல்லி இருந்தார்கள்.

சத்யராஜ் நான் எந்த ஒரு விஷயத்திற்காகவும் மன்னிப்பு கேட்க மாட்டேன், என்னை உங்களது படங்களில் நடிக்க வைத்தால் இதுபோன்ற சிக்கல்கள் வரும் என நினைத்தால் யாரும் என்னை உங்களுடைய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

விஜய் சேதுபதி: கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிப்பதாய் இருந்தது.

முத்தையா முரளிதரன் இலங்கையில் நடந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என கடும் கண்டனங்கள் இருந்தது. பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல் விஜய் சேதுபதியும் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ரிலீசின் போது அந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தது.

விழாக்கள் சமயத்தில் அந்தந்த மொழி படங்களுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், வாரிசு படம் பொங்கல் அன்று கர்நாடகாவில் ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் கண்டனங்கள் எழுந்தன.

அசின்: நடிகை அசின் யோசிக்காமல் செய்த விஷயத்தால் தமிழ் சினிமாவில் இருந்தே புறக்கணிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

ஈழப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் யாரும் இலங்கைக்கு போகக்கூடாது என நடிகர் சங்கத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தி பட சூட்டிங் ஒன்றிற்காக அசின் இலங்கைக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →