திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அனிருத் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. தனுஷ் படத்தில் தொடங்கிய ஸ்ருதியின் நட்பு

Music Director Anirudh: தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் 3. இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். மேலும் இப்பாடல்களை இசையமைத்தது அனிருத்.

இப்படத்தில் கிடைத்த வெற்றிக்கு பிறகு தன்னுடைய அடுத்தக்கட்ட முயற்சிகளின் மூலம் சிறந்த இசையமைப்பாளர் பட்டியலில் உச்சத்தில் இருந்து வருகிறார் அனிருத். மேலும் இவருடன் நட்பு கொண்டு டேட்டிங் வரை சென்ற 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: 40 வயது மேல் சாதித்து காட்டிய 5 நடிகர்கள்.. முரட்டு ஹீரோவாக கலக்கிய ராஜ்கிரன்

ஆண்ட்ரியா: இவருக்கும், அனிருத் இருக்கும் இடையே இசை ரீதியான நட்பு இருந்தது. மேலும் தன்னைவிட ஐந்து வயது இளையவரான அனிருத் உடன் இவர் மேற்கொண்ட நட்பு, அதன் பின் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பார்ட்டி, ஃப்ங்க்ஷன் போன்ற இடங்களுக்கு செல்வது குறித்து பெரிதும் பேசப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து ஆண்ட்ரியாவின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அவற்றை பெரிதாய் கருதிய ஆண்ட்ரியா இவரின் நட்பை முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ்: அனிருத் உடன் ஏற்பட்ட டேட்டிங் கிசுகிசுப்பை பெரிதும் பொருட்படுத்தாது இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறினார் கீர்த்தி சுரேஷ். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரின் திருமணம் குறித்த வதந்தியும் வெளிவந்தது. இதை எதையும் பொருட்படுத்தாத கீர்த்தி சுரேஷ், இவருடன் நட்போடு தான் இன்று வரை இருந்து வருகிறார்.

Also Read: ஆர்யாவை ஓவர் டேக் செய்ய வரும் டான்சிங் ரோஸ்.. வேற லெவலில் உருவாகும் கூட்டணி

ஸ்ருதி ஹாசன்: 3 படத்தில் தனுஷ்ற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இடம் பெற்றிருப்பார். இப்படத்தின் மூலம் ஸ்ருதிஹாசனுக்கும், அனிருத் இருக்கும் நட்பு தொடங்கியது. அதை மேற்கொண்டு மான் கராத்தே படத்திலும் அனிருத், ஸ்ருதிஹாசனை ஒரு பாடல் பாட வைத்துள்ளார். மேலும் இவர்களின் டேட்டிங் குறித்து கிசுகிசுக்கப்பட்டாலும் அதை இவர்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா ஆனந்த்: அனிருத் உடன் இவர் மேற்கொண்ட நட்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும்தான் வேறு எதுவும் எங்களுக்கும் இல்லை என பிரியா ஆனந்த் கூறியுள்ளார். மேலும் சர்ச்சைக்காகவே இது போன்ற வதந்திகளை பரப்பி வருபவர்களின் செயலுக்கு விளக்கம் அளிக்க விருப்பம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Also Read: ஒரே வயது நடிகையை அம்மாவாக நடிக்க வைத்த 5 நடிகர்கள்.. சினிமா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ஜெனிதா காந்தி: ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் இசை அமைப்பில் இவர் பாடிய பாடல்கள் பல ஹிட் கொடுத்திருக்கின்றன. அதிலும் செல்லம்மா, அரபிக் குத்து, பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்கள் மூலம் இவர் அனிருத் உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான். இது போன்ற வதந்திகளை பெரிதாக நான் பொருட்படுத்துவதில்லை என கூறி வருகிறார் ஜெனிதா காந்தி.

Trending News