வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யோசிக்காம நடிச்சு தொலைச்சுட்டேன், இப்ப வாழ்க்கை போச்சுன்னு புலம்பும் 5 நடிகைகள்.. வில்லியாக சோலி முடிந்த சிம்ரன்

5 Tamil Actresses: திறமையான நடிகைகள் சிலர், சரியான முடிவை எடுக்கத் தவறி விடுகின்றனர். எதுக்குடா! இந்த படத்துல நடிச்சோன்று புலம்புவதோடு, லைஃபையே தொலைச்சிட்டு நிற்கும் 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

யாஷிகா ஆனந்த்: சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேமஸ் ஆனார். ஆனால் அவர் நடித்த அடல்ட் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் தெரியாமல் நடித்து விட்டேன். இந்த ஒரு படத்தில் நடித்த குற்றத்திற்காக இப்போ வரை எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு வரல, என் லைஃப் அந்த ஒரு படத்தில் நடிச்சதாலேயே சேஞ்ச் ஆயிடுச்சு என்று சொல்லி வருத்தப்படுகிறார்.

நஸ்ரியா: கோலிவுட் டாப் நடிகர் தனுஷின் படம் என்பதை மட்டுமே பார்த்து நையாண்டி படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடித்தது ரொம்ப பெரிய தப்பு. அந்த படத்தில் அவரை ஒரு ஹீரோயின் ஆக காட்டவில்லை. தம்பியின் பொண்டாட்டியவே போட்டி போட்டுக் கொண்டு ஜொள்ளு விடுவார்கள். இந்த படத்தின் கதையே நஸ்ரியாவுக்கு தெரியாதாம். அவருக்கே தெரியாமல் இந்த படத்தில் அவரை தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் சொன்னார். இந்த படத்துக்கு அப்புறம் நஸ்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இல்லாம போச்சு.

இந்துஜா ரவிச்சந்திரன்: ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இந்துஜா நடித்தார். இந்த படத்தில் கொஞ்சம் ஓவராகவே இந்துஜாவை கவர்ச்சியாக காட்டினர். வளரும் சமயத்தில் கிளாமர் காட்டினால் அதன் பின் கிளாமர் நடிகையாகவே பார்க்கப்படுவார் என்பதை அவர் மறந்துவிட்டார்.

‘பில்லா பாண்டியன் இந்த படத்துல நடிச்சதுக்கு நான் வருத்தப்படுறேன். எனக்கு மிகப்பெரிய கெட்ட பெயர்’ என்று சொல்லி வருத்தப்பட்டார். இந்த படத்தாலேயே அடுத்தடுத்து அவருக்கு சரியான படங்கள் அமையவில்லையாம். இருந்தாலும் பல போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா சேர்ந்து நடித்து பார்க்கிங் என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.

Also read: இனி நடிக்கவே கூடாதுன்னு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட 6 பிரபலங்கள்.. அசினுக்கு வந்த கெட்ட நேரம்

இந்த படத்துல தெரியாமல் நடிக்க வச்சிட்டாங்கன்னு புலம்பும் 5 நடிகைகள்

நயன்தாரா: தென்னிந்திய நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த நயன்தாரா, இப்போது பாலிவுட்டையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சூர்யா, அசின் நடித்த கஜினி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். ஆனால் அது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்போதுதான் வருத்தப்படுகிறார். ஏனென்றால் அந்த படத்திற்கு பிறகு அவர் காணாமலே போயிருக்கணும். ஆனால் கஷ்டப்பட்டு எப்படியோ முட்டி மோதி மறுபடியும் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து நிற்கிறார்.

சிம்ரன்: சரண் இயக்கத்தில் வெளியான ஒரு அழகான காதல் திரைப்படம் தான் பார்த்தேன் ரசித்தேன். இந்த படம் சிம்ரன், லைலா, பிரசாந்த் மூவரின் முக்கோண காதலைப் பற்றி பேசிய படம். இந்த படத்திற்கு முன்பு வரை சிம்ரன், ஒரு ஹோம்லி நடிகையாக இளசுகளை கவர்ந்தவர். ஆனால் இந்த படத்தில் பிரசாந்த் லைலாவை விரும்புகிறார் என தெரிந்தும், அவரை வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கக்கூடிய ஒரு நெகட்டிவ் கேரக்டரில் வில்லியாக தான் சிம்ரன் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு சிம்ரனின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, அதன் பின் சுத்தமாகவே இல்லாமல் போய்விட்டது.

Also read: நிஜ புருஷன், பொண்டாட்டிய சேர்ந்து நடித்த 3 படங்கள்.. ஜோடி பிரிச்சு சகுனி வேலை பார்த்த மணிரத்தினம்

Trending News