திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குடும்ப குத்து விளக்கு கேரக்டருக்கு மட்டும் செட் ஆகும் 5 நடிகைகள்.. சிரிப்பிலும் நடிப்பிலும் கொள்ளை அடித்த சாய்

5 Actress only for Family Oriented Character: சினிமாவிற்கு ஹீரோயினாக நடிக்க வந்து விட்டாலே கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி சில விஷயங்களை மாற்றிக்கொண்டு நடித்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்ற ஒரு நிலைமை இருந்தது. ஆனால் அதையெல்லாம் மாற்றி குடும்ப குத்து விளக்காக இருந்தால் கூட மக்களிடம் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக ஏற்ற மாதிரி சில நடிகைகள் மக்கள் மனதில் செட் ஆகி விட்டார்கள். அந்த நடிகைகள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: இவரைப் பொருத்தவரை கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைத்தால் எந்த படமாக இருந்தாலும் நடித்து பேறும் புகழையும் வாங்கிவிடுவார். அப்படி இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே வித்தியாசமாகவும், துணிச்சலுடனும் ஒரு பெண்ணுக்கு உண்டான தைரியத்தை வெளிக்காட்டும் விதமாகத்தான் இருக்கும். இதை தவிர கிளாமருக்கு இடமே இருக்காத அளவிற்கு பார்த்து பார்த்து நடிக்க கூடியவர்.

ப்ரியா பவானி சங்கர்: சின்னத்திரை மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக வந்திருந்தாலும் தற்போது இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு சில முன்னணி ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார். அத்துடன் தன்னுடைய இமேஜுக்கு எந்தவித களங்கமும் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி தற்போது வரை குடும்ப குத்து விளக்காக இருக்கும் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஓகே சொல்லி நடித்து வருகிறார்.

Also read: அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா

லிஜோமோல் ஜோஸ்: சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பின் ஜெய் பீம் படத்தில் செங்கேணி என்ற கேரக்டர் மூலம் இவருக்கான ஒரு தனித்துவமான நடிப்பை மக்களிடம் நிரூபித்து விட்டார். இவரிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் குடும்ப லட்சணமாக இருக்கக்கூடிய முகபாவனை தான். அதனால் இந்த மாதிரி கேரக்டருக்கு மட்டும் தான் இவர் செட் ஆகும் என்ற அளவிற்கு முத்திரை பெற்று விட்டார்.

துஷாரா விஜயன்: சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்காக இருப்பதாலோ என்னமோ மாடர்ன் டிரஸ் இவருக்கு கொஞ்சம் கூட சூட் ஆகாது என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறார். அதனால் இவரை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் இந்த மாதிரியான ஒரு கேரக்டராக தான் இருக்கிறது.

சாய் பல்லவி: பார்த்ததுமே கையெடுத்து கும்பிடலாம் என்று தோன்றுகிற அளவிற்கு குடும்ப குத்துவிளக்காக, கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், பார்ப்பவர்கள் சொக்கும் அளவிற்கு ஒத்த சிரிப்பாலேயே அனைவரையும் மயக்கும் காந்த சக்தியை பெற்று பேரழகியாக மக்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார். பொது நிகழ்ச்சியாக இருக்கட்டும், படங்களாகவும் இருக்கட்டும் இவருக்கு கிளாமர் சுட்டு போட்டாலும் வராது என்று சொல்லும் அளவிற்கு ஒரு குடும்ப லட்சணமான பெண்ணாக நடித்து வருகிறார்.

Also read: மாப்பிள்ளை வரனுக்கு சாய் பல்லவி போட்ட கண்டிஷன்.. அடுத்த ஔவையார் லிஸ்டில் வரப்போகும் மலர் டீச்சர்

Trending News