செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. வாய்ப்பு இல்லாமல் ஓடிடியில் தஞ்சம் அடைந்த அமலாபால்

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ஒரு சில நடிகைகள் தற்பொழுது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். தற்பொழுது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் விதமாக வெப் சீரியஸில் நடித்து வருகின்றன. அப்படியாக ரசிகர்கள் மத்தியில் வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

அஞ்சலி: தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும்,  கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சமான நடிகையாகவே வலம் வந்தார். தற்பொழுது கைவசம் எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும் ஃபால், ஜான்சி போன்ற தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Also Read: அஞ்சலி-ஜெய் லிவிங் டு கெதர் முறிவிற்கு இதுதான் காரணம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபலம்

அனுமோல்: மலையாளத்தில் வெளியான அகம் திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை அனுமோல். ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த இவருக்கு அதன் பிறகு சரிவர பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். அதிலும் சமீபத்தில் வெளியான அயலி வெப் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரேயா ரெட்டி: சினிமா துறையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து  பள்ளிக்கூடம், திமிரு போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தார். தற்பொழுது ஓடிடியில் வெளியாகும் வெப் சீரியலில் தலை காட்டத் தொடங்கியுள்ளார்.  

Also Read: அயலி பட அம்மாவா இது!. மாடர்ன் உடையில் கலக்கலாக வெளிவந்த புகைப்படம்

அமலாபால்: தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் அறிமுகமான அமலாபால் மைனா படத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன்பின் விஜய், ஆர்யா, அதர்வா போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்பொழுது சமீப காலமாகவே கைவசம் எந்த ஒரு பட வாய்ப்புகளும் அமையாததால் ஓடிடியில் வெளியாகும் வெப் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்: சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமான வரலட்சுமி தமிழில் போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாக இருந்து வந்தார். அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் தாரை தப்பட்டை படத்தில் தனது வெறித்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அதனைத் தொடர்ந்து சர்க்காரில் விஜய்யை மிரட்டும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்திருப்பார். தற்பொழுது வெப் சீரியலிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்ட தொடங்கியுள்ளார்.

Also Read: சொந்த ஊர்ல அசிங்கப்பட்ட அமலாபால்.. நம்ம ஊர்ல ராணிக்கு கிடைத்த மரியாதையால் ஒரே பூரிப்பு

Trending News