வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

Actor Siddharth Dating Actress: பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி, தற்போது தமிழ் சினிமாவின் பிளேபாய் ஹீரோ என அழைக்கக்கூடிய நடிகர் சித்தார். இவர் காதல் வலையில் சிக்கி, பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளான 5 நடிகை யார் யார் என்பாதை பற்றி பார்ப்போமா!

அதிதி ராவ் கைதாரி: அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் சமீபகாலமாக நடிகை அதிதி ராவ் உடன் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார் என்று வதந்தி பரவியது. இவர்கள் ஜோடியாக சுற்றுலா செல்வதும் , இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதும், இதைப்பற்றி அதிதித்தியாவும் சரி சித்தார்த்தும் சரி எதையும் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் டக்கர் படம் ப்ரோமோஷன் பொழுது அவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு அதப்பத்தி எல்லாம் நான் இப்போ இங்கே பேச விரும்பல, அவ்வளவு ஆர்வம் உங்களுக்கு இருந்தா தனியா வாங்க சொல்றேன்னு சொல்லி நடிகர் சித்தார்த் கூறினார்.

சோஹா அலி கான்: சித்தார்த்தும் பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலி கானும் ஹிந்தி மொழியில் வெளியான “ராங் டே பிச்சாண்டி”படப்பிடிப்பின் போது சந்தித்தனர். பிறகு இருவரும் இணைந்து பழக ஆரம்பித்தன, சித்தார்த்தும் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அது இன்னும் வசதியாக போய்விட்டது, ஆனால் இதைப் பற்றி சோஹாவிடம் கேட்கும் போது அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று மறுத்துவிட்டார். நடவடிக்கையில் தெரிந்தது இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பிறகு சில காலங்களுக்கு பிறகு சித்தாத் சோஹாவுக்கு போதிய நேரமும், முக்கியத்துவம் தராததால் அடிக்கடி சண்டை வருவது வழக்கமானது. சித்தார்த்துக்கும் நீண்ட காலா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கு அவ்வளவு விருப்பமில்லை. ஆகையால் இருவரும் பிரிந்து விட்டனர்.

Also Read: லியோ-வில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள கில்மா நடிகை.. வான்டடா தளபதிக்கு கொடுத்த முத்தம்

திரிஷா : சித்தார்த் தனது விவாகரத்திற்கு பிறகு நிறைய நிறை நடிகைகள் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதில் த்ரிஷாவும் ஒருவர். திரிஷா கிருஷ்ணனும் சித்தார்த்தும் இணைந்து ஆயுத எழுத்து என்னும் திரைப்படத்தில் நடித்தனர். அதற்குப் பிறகு இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று பரவலாக வதந்தி வெளியானது. இதைக் குறித்து திரிஷாவிடம் கேட்டபோது அவர் அதை மறுத்துவிட்டார். இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறினார். பின்னர் திரிஷாவும் பாகுபலி நடிகர் ராணாவும் காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் பரவியது. இதற்கு த்ரிஷா இருவரும் நல்ல நண்பர்கள் என கூறினார்.

அதன் பின்னர் திரிஷாவிற்கு வருண் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் ஆகி மூன்று மாதங்கள் கழித்து இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுனால் பிரிந்து விட்டனர். பிறகு தனுஷ், திரிஷா பற்றி வதந்தி பரவியது, இப்படியே அடுத்து அடுத்து புறணிகளை கிளப்புவதால் திரிஷாவிற்கு கல்யாண ஆசை வெறுத்துப் போனதாக சொனார்.

Also Read: சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

சுருதிஹாசன்: சித்தார்த் தனது பிரேக்கப்பிற்கு பிறகு ஸ்ருதிகாசனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக வதந்திகள் பரவினர். பிறகு இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர்.காதலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் வகையில் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடிவு செய்தனர். அது ஸ்ருதிஹாசனின் அப்பா கமலஹாசன் சந்தோஷம்தான் இருவரும் இணைந்து இருப்பதில், இருவரும் ஐந்து மாதங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். பிறகு இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்களது ஒன்றரை வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் .

சமந்தா: ஸ்ருதிஹாசனுடன் பிரேக்கப் ஆகி இரண்டு வருடங்கள் கழித்து நடிகை சமந்தாவை காதலித்தார். இருவரும் தெலுங்கு படம் “ஜபர்தஸ்த்” நடித்தனர். அதற்குப்பிறகு இருவருக்கிடையிலும் 2 வருடங்கள் காதலித்து வந்தனர். அதன் பின்னர் சமந்தா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்கு சமந்தாவின் நண்பர்கள் சித்தார்த்தை பற்றியும் கன்னட திரைப்படம் “எனக்குள் ஒருவன்” கதாநாயகி தீபா பற்றியும் கூறினார்கள். சித்தார்த்தின் நடவடிக்கைகள் குறித்து சமந்தாவை எச்சரித்தனர். பிறகு சமந்தா அதிலிருந்து அவருடன் பிரண்டாக பழக்கத் தொடங்கினார்.

Also Read: சியர்ஸ் கேளாக லியோ டாட்டூவுடன் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 40 வயசுலையும் என்ன பொண்ணுடா!

Trending News