வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யுடன் நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் போன 5 நடிகைகள்.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது ஸ்ரேயா!

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித், விஜய் இருவருடனும் நடிப்பதற்கு டாப் ஹீரோயின்கள் ஏங்கி தவிக்கின்றனர். ஆனால் விஜய்யுடன் ஜோடி போட்டாலும் அஜித்துடன் நடிக்க முடியாமல் தவிக்கும் 5 நடிகைகள் யார் என்று பார்ப்போம்.

ஜெனிலியா:  தனது க்யூட்டான சிரிப்பால் பலரது மனதில் இடம் பிடித்த ஜெனிலியா அவர் விஜய்யுடன் சச்சின் மற்றும் வேலாயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் சச்சின் படம் 90ஸ் கிட்ஸ் களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ஒன்று. விஜய்யுடன் ஜோடி போட்ட ஜெனிலியா, இப்போது வரை அஜித்துடன் நடிக்க முடியாமல் ஏங்கி தவிக்கிறார். இருப்பினும் திருமணம் ஆகி தன்னுடைய மார்க்கெட்டை இழந்த ஜெனிலியா, இதற்கு மேல் அஜித்துடன் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லை.

ஸ்ரேயா சரண்: அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம் விஜய்யுடன் கை கோர்த்த ஸ்ரேயா சரண் அதன் பிறகு, தளபதி நாயகியாகவே வலம் வந்தார். இந்தப் படத்தில் ஸ்ரேயா மற்றும் விஜய் காம்போ பக்காவாக வொர்க் அவுட் ஆனது. ஆனால் அஜித்துடன் ஸ்ரேயா ஜோடி போட துடிதுடித்துக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடைசிவரை அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. இப்போது திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகி, சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். இருப்பினும் அவருக்கு அஜித் உடன் நடிக்க முடியாமல் போனது இப்போது வரை நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

Also Read: ரிலீஸ் தேதியுடன் கதிகலங்க வைத்த லோகேஷ்.. ஹாலிவுட் சினிமாவையே அதிர வைத்த ப்ரோமோ வீடியோ

ஹன்சிகா மோத்வானி: நெய் குழந்தையாக மாப்பிள்ளை படத்தின் மூலம் திரையுலகில் குதித்த ஹன்சிகா மோத்வானி 2011 ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம் மற்றும் 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படத்தில் விஜயுடன் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அன்று முதல் இன்று வரை இவரின் க்யூட்னஸ் மட்டும் குறைவதே இல்லை இன்றும் குட்டி குஷ்புவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது திருமண உறவில் இணைந்து சினிமாத்துறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

கீர்த்தி சுரேஷ்: சர்கார் மற்றும் பைரவா படங்கள் மூலம் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தனது உடல் எடையை சிறிது குறைத்து கதாநாயகி கதைகளம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். மிகவும் குறைந்த காலத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அஜித்துடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

Also Read: வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஓடிடி நிறுவனங்கள்.. வாரிசு, துணிவால் வந்த சோதனை

சமந்தா: மாஸ்கோவின் காதல் படத்தின் மூலமாக தன்னை அறிமுகப்படுத்திய சமந்தா தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் விஜய் உடன் மெர்சல், தெறி, கத்தி போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவரும் இதுவரை அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்.

இவ்வாறு பல ஹிட் படங்களை கொடுத்த இந்த 5 நடிகைகளும் தளபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுள் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா போன்ற நடிகைகளுடன் அஜித் இனிவரும் காலங்களில் கைகோர்த்து நடித்தால் எப்படி இருக்கும். இதற்கு காலம் தான் பதில் சொல்லும், காத்திருந்து பார்ப்போம்.

Also Read: வசூல் மன்னனை பின்னுக்கு தள்ளிய ஏகே.. தளபதி 67, ஏகே 62 படங்களில் அஜித், விஜய்யின் சம்பளம்

Trending News