வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. என்னோட குரு என அந்தர் பல்டி அடித்த இந்துஜா

Prabhu Deva Dating Actress: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என புகழப்பட்ட பிரபுதேவா நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். இருப்பினும் இவர் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியவர். அப்படி பிரபுதேவா டேட்டிங் செய்த ஐந்து நடிகைகளை பற்றி பார்ப்போம்

மீனா: பிரபுதேவா மற்றும் மீனா இருவரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்திற்கு அடுத்ததாக ‘டபுள்ஸ்’ என்ற படத்தில் இந்த ஜோடி இணைந்தது. இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்து டேட்டிங்கும் செய்தனர். ஆனால் பிரபுதேவாவின் சுயரூபம் தெரிந்த பின்பு மீனா அவரை கழட்டிவிட்டார்.

பிரபுதேவா- மீனா

meena-prabu-deva
meena-prabu-deva

Also Read: திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருந்த 6 நடிகர்கள்.. பிரபுதேவாவை வசியம் செய்த நயன்

அசின்: பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின் நடிப்பில் வெளியான படம் தான் போக்கிரி. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அசின் மற்றும் பிரபுதேவா இருவருக்கும் காதல் மலர்ந்து, டேட்டிங் செய்தனர். ஆனால் அவர்களது உறவு வெகு நாட்களாக நீடிக்காமல் சீக்கிரமே பிரிந்து விட்டனர்.

பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த அசின்

asin-prabu-deva
asin-prabu-deva

நயன்தாரா: பிரபுதேவா மற்றும் நயன்தாரா ரிலேஷன்ஷிப் ஊரறிந்த விஷயம் தான். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் வாழ்ந்து வந்தனர். பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நயன்தாரா படு கவர்ச்சியாக நடித்து காதலனை தூக்கி விட பார்த்தது, அவர்களுக்கிடையே இருந்த உறவை அம்பலப்படுத்தியது. திருமணம் செய்து கொள்ள இருந்த இவர்கள் திடீரென்று பிரிந்து விட்டனர். காரணம் பிரபு தேவாவின் மனைவி கொடுத்த குடைச்சலால் நயன்தாரா அவரை விட்டுப் பிரிந்து விட்டார்.

பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த நயன்தாரா

nayan-prabu-deva
nayan-prabu-deva

Also Read: 3 திருமணங்களை அசால்டாக செய்து கொண்ட 5 பிரபலங்கள்.. ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரையே வளைத்துப் போட்ட பிரபுதேவா

ஹன்சிகா: நயன்தாரா மடியில் விழுந்து கிடந்த பிரபுதேவாவை மீட்டெடுத்தது ஹன்சிகா தான். தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பூவாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஹன்சிகா, பிரபுதேவாவுடன் குலேபகாவலி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் பத்திக்கிச்சு. அதன் பின்பு ஹன்சிகா, பிரபுதேவா உடன் டேட்டிங்கில் இருந்தார். ஆனால் அதன் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த ஹன்சிகா

prabu-deva-hanshika
prabu-deva-hanshika

இந்துஜா: மேயாத மான் படத்தில் வைபோவின் தங்கையாக நடித்தது மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இந்துஜா, அதன் பிறகு மகா முனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவர் கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி படத்தில் நடிக்கும் போது பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததை தொடர்ந்து டேட்டிங் செய்தனர். அவர்கள் டேட்டிங் செய்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. ஆனால் இது குறித்து இந்திராஜாவிடம் கேட்டபோது, ‘பிரபுதேவா என்னுடைய குரு’ என அப்படியே பல்டி அடித்து விட்டார்.

பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த இந்துஜா

prabu-deva-induja-cinemapettai
prabu-deva-induja-cinemapettai

Also Read: நயன்தாராவின் காதலை மறக்காத பிரபுதேவா.? உங்களுக்கு உருட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா

Trending News