புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அரை கிழவியானாலும் அடுத்தடுத்த திருமணத்தை செய்த 5 நடிகைகள்.. வனிதா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

Actresses Second Marriage: சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இல்லற வாழ்க்கை அவ்வளவு ஈசியாக அமைந்து விடாது. அதிலும் சில நடிகைகள், இந்த வாழ்க்கையாவது சந்தோசமாக அமைந்து விடாத என அடுத்தடுத்து வயதைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி அரை கிழவியான பின்பும் திருமணங்களை செய்த 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

சீதா: 80-களில் முன்னணி நடிகையாக செம ஹோம்லி லுக்குடன் இருந்த நடிகை தான் சீதா. இவர் ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் டாப் நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி போட்டவர். அதன் பின் புதிய பாதை என்ற படத்தில் நடிக்கும் போது அந்தப் படத்தின் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை காதலித்து பின் இரு வீட்டாரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் 10 வருடம் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

சீதாவும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை கஷ்டப்பட்டு தொடங்கி மீண்டும் 2019 சீரியல் நடிகர் சதீஷை தனது 43 வயதில் காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். நடிகர் சதீஷ் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான ஆனந்தம் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். 6 வருடத்திற்கு பிறகு இவருடைய இரண்டாவது திருமணமும் ஒத்து வராததால் இப்போது சதீசையும் விட்டு பிரிந்து தன்னுடைய அம்மாவுடன் சீதா தனித்து வாழ்கிறார். தற்சமயம் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சீதா வீட்டிலே மாடித்தோட்டம் அமைத்து தன்னுடைய மனநிலையை சந்தோசமாக மாற்றிக் கொண்டு பிஸியாக இருந்து வருகிறார்.

Also Read: கமல், அம்பிகா காம்போவில் பட்டைய கிளப்பிய 5 படங்கள்.. பிளாக் பஸ்டர் ஹிட் கண்ட சகலகலா வல்லவன்

அம்பிகா: 70, 80களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிய முன்னணி நடிகை தான் அம்பிகா.இவர் கமல், ரஜினியின் பிரதான நடிகையாக இருந்தவர். கடந்த 1988 ஆம் ஆண்டு பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து கொண்ட அம்பிகா 8 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

அதன் பின் ஆறு வருடம் கழித்து 2000 ஆம் ஆண்டில் தனது 38 வயதில் நடிகர் ரவிகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் இரண்டே ஆண்டில் விவாகரத்தும் பெற்று விட்டார். தற்போது தனக்கு ஆண் துணையே வேண்டாம் என்று தன் பிள்ளைகளுடன் வசித்து வரும் அம்பிகா சீரியல்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

ஊர்வசி: கதாநாயகி, குணச்சித்திர வேடம், காமெடி என நிறைய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 8 வருடத்தில் விவாகரத்து பெற்று மறுபடியும் 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஓனர் சிவப்பிரசாத் என்பவரை 45 வயதில் திருமணம் செய்து அடுத்த வருடமே ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

Also Read: அக்கா தங்கை இணைந்து வெற்றி கண்ட 6 படங்கள்.. அம்பிகா ஸ்கோர் செய்தும் தட்டி தூக்கிய ராதா

வனிதா விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார் 2000 ஆம் ஆண்டில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ஏழு வருடத்திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விவாகரத்து செய்துவிட்டனர். இன்னிலையில் முதல் கணவரை பிரிந்த பிறகு 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு ராபர்ட் மாஸ்டருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வனிதா, பின் மூன்றாவது திருமணம் ஆக யூடியூப் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களது திருமணத்தின் போது பீட்டர் பாலுக்கு வனிதா கொடுத்த லிப் லாக் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆக பேசப்பட்டது. அதன்பின் பீட்டர் பாலையும் பிரிந்து தற்போது தன்னுடைய மூத்த மகளோடு வனிதா தனித்து வாழ்கிறார். சமீபத்தில் பீட்டர் பால் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டியானாலும் எனக்கு அது வேண்டும் என்று திருமண வாழ்க்கையை அடுத்தடுத்து செய்து கொண்ட வனிதாவிற்கு மூன்று திருமணமும் செல்லுபடி ஆகாமல் போனது. இவருடைய கணவர்களின் லிஸ்ட் தான் பெருசா போய்க்கொண்டு இருக்கிறது.

Also Read: அட்வகேட் கதாபாத்திரத்தில் அசத்திய 5 நடிகைகள்.. வெண்பாவாக போராடிய ஜோ

ஊர்மிளா: ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் தான் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் தமிழில் இந்தியன், சாணக்யன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் 42 வயதில் அரை கிளவியான பிறகு காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர் மொஹ்சின் அக்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Trending News