புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே முக ஜாடையில் உள்ள 5 நடிகைகள்.. தளபதியே பார்த்து வியந்த அக்கடுதேசத்து நடிகை

இந்த உலகத்தில் நம்மை போலவே ஏழு பேரு இருப்பார்கள் என்பது பெரியவர்களின் நம்பிக்கை எனலாம். அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதுள்ள டெக்னாலஜியால் ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை போலவே மற்றொரு நடிகையின் முகஜாடை உள்ளது ரசிகர்களை ஆச்சரியத்துடன் பார்க்கவைக்கும். அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

திரிஷா- ரீமாசென்: இவர்கள் இருவரும் ஒரே காலக்கட்டத்தில் தமிழில் அறிமுகமானதால் இருவரின் முகஜாடையும் பார்ப்பதற்கு ஒன்றாகவே அமைந்திருக்கும். அதிலும் முக்கியமாக திரிஷா லேசா லேசா படத்திலும், ரீமாசென் மின்னலே படத்திலும் ஒரே முகஜாடையில் இருந்தது அன்றைய கால ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இருவரின் கண்கள், தாடை மற்றும் உதடு ஒரேமாதிரியாக இருக்கும்.

Also Read: திரிஷாவை விட அதிக கால்ஷீட் இவருக்கு தானாம்.. லியோவில் பரபரப்பை ஏற்படுத்தும் லோகேஷ்

சமந்தா- சம்யுக்தா: நடிகை சமந்தா திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இவரைப்போலவே சிலர் சமூக வலைத்தளத்தில் மேக்கப்புகளை போட்டு உலா வந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் மிஞ்சும் அளவுக்கு சமந்தாவையே அச்சு அசலாக உரித்து வைத்தது போல் நடிகை சம்யுக்தா தற்போது வலம் வருகிறார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் பிரபலமான இவர் சமந்தாவின் கண், உதடு, நாடி உள்ளிட்டவை சம்யுக்தாவுக்கு ஒரே மாதிரியாக இருக்கும்.

காஜல் அகர்வால் – பிரணிதா: இவர்களில் நடிகை காஜல் அகர்வால் தான் தமிழில் முதலில் நடிக்க வந்த நிலையில், நடிகர் கார்த்தியின் சகுனி படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா. இவரது கண்கள், தாடை பார்ப்பதற்கு அப்படியே காஜல் அகர்வால் போலவே இருப்பார். கன்னட நடிகையான பிரணிதா காஜல் அகர்வால் முகஜாடை கொண்டதால் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விரக்தியில் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா.. அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்த அவலம்

சித்தி இத்னானி- பிந்து மாதவி: கழுகு, தேசிங்குராஜா உள்ளிட்ட படங்களின் மூலமாக மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிந்து மாதவி. இவர் வாய்ப்பில்லாத சமயத்தில் தமிழ், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு தற்போது வரை பெரிய வாய்ப்பில்லாமல் உள்ளார். இந்த சமயத்தில் நடிகை சித்தி இத்னானி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக அறிமுகமாகி நடித்தார். இப்படத்தில் இவரை முதலில் பார்த்தோர் பிந்து மாதவி தான் நடித்துள்ளார் என நினைக்கும் அளவுக்கு 90 சதவிகிதம் சித்தி இத்னானி, பிந்து மாதவி முகஜாடையில் இருந்தார்.

அசின்- பூர்ணா: போக்கிரி, தசாவதாரம், வரலாறு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த அசின், ஹிந்தியில் வாய்ப்பு வந்தவுடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார். அந்த சமயத்தில் அசின் போலவே முகஜாடையில் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை பூர்ணா. அசின் போலவே எடுப்பான பற்களுடனான சிரிப்பு, கன்னம் என இருந்த பூர்ணாவை பார்த்து, நடிகர் விஜய் ஒருமுறை நீங்கள் அப்படியே அசின் மாதிரியே இருக்கீங்க என வியந்து பார்த்து அவரிடம் தெரிவித்தாராம்.

Also Read: விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம

Trending News