ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குடி ஜாஸ்தியாகி வாய்ப்பில்லாமல் திண்டாடி வரும் 5 ஹீரோயின்.. கிளாமர் தூக்கலான கிரண்

Actresses lose film opportunities: குடி குடியைக் கெடுக்கும்’ என மது பாட்டிலில் எழுதினாலும் யாருக்கும் புத்தி வருவதில்லை. முதலில் ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த ஐந்து நடிகைகள் காட்டிவிட்டனர். இவர்களுடைய குடிப்பழக்கம் ஜாஸ்தியாகி, சினிமா வாய்ப்பை கெடுத்துக் கொண்டு, இப்போது சோத்துக்கே வழி இல்லாமல் சிங்கியடிக்கின்றனர்.

சதா: தென்னிந்திய மொழிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சதா, திடீரென பட தயாரிப்பிலும் களம் இறங்கினார். இவர் நடிப்பு தயாரித்த ‘டார்ச் லைட்’ என்ற சர்ச்சைக்குரிய படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதுமட்டுமல்ல இவருக்கு ஓவர் குடிப்பழக்கம் இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அதைத் தொடர்ந்ததால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல், கடைசியில் ஒரு ஹோட்டலை நடத்தி வந்தார்.

மனிஷா கொய்ராலா: தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், கமலின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. கொள்ளை கொள்ளும் அழகுடைய இவர், ரொமான்டிக் காட்சிகளில் நடிகர்களுடன் நெருங்கி நடிப்பது கூச்சமாக இருந்ததால், அந்த கூச்சத்தை போக்குவதற்காகவே தொடக்கத்தில் குறைந்த அளவு மது அருந்தி இருக்கிறார்.

ஆனால் அதுவே ஆபத்தாக முடிந்து விட்டது. மது அருந்தாமல் அவரால் ஒரு காட்சியில் கூட நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடைசியில் அவருடைய மதிப்பு மிக்க வாழ்க்கையை மதுவால் இழந்துவிட்டார். இதை அவரே சமீபத்திய பேட்டியில் உருக்கமாக தெரிவித்து இருந்தார்.

நமிதா: தெலுங்கில் அறிமுகமாகி, அதன் பின் தமிழில் கேப்டனுடன் எங்கள் அண்ணா படத்தில் என்ட்ரியானவர் தான் கிளாமர் குயின் நமிதா. இவருடைய மார்க்கெட் எகிறிய சமயத்தில், ஓவர் குடிப்பழக்கத்தால் குண்டு பூசணிக்காய் போலவே மாறிவிட்டார். இதனால் பட வாய்ப்புகளும் சுத்தமாகவே இல்லாமல் போனது.

இருப்பினும் சின்னத்திரையில் மானாட மயிலாட, பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டார். பின்பு பீல்ட் அவுட் ஆன நமிதா, கடைசியில் கல்யாணம் செய்து கொண்டு இப்போது குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: கவர்ச்சியை கையில் எடுத்தும் தோத்துப்போன 6 நடிகைகள்.. அட்ரஸ்சே இல்லாமல் போன அரேபிய குதிரை நமிதா

குடி ஓவராகி வாய்ப்பிழந்த 5 நடிகைகள் 

பூனம் பஜ்வா: பரத்துடன் சேவல் படத்தில் ஹோம்லி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பூனம் பஜ்வா, தென்னிந்திய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதிலும் குடியும் கும்மாளமுமே ஹாப்பியாக இருந்த பூனம் பஜ்வா தன்னுடைய உடல் எடையை தாறுமாறாக ஏற்றி விட்டார். இதனால் பட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

அப்படியே கிடைத்தாலும் ஆன்ட்டி ரோல் தான் கொடுக்கிறார்கள், இதனால் இப்போது கிளாமர் பக்கம் சென்று விட்டார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி, அதில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு பூனம் பஜ்வா எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து, கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிடுவதால் லைக்குகள் குவிகிறது.

கிரண்: ஜெமினி படத்தில் சியான் விக்ரம் ஜோடி போட்ட கிரண் அடுத்தடுத்து அஜித்துடன் வில்லன், உலக நாயகனுடன் அன்பே சிவம் என தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். முன்னணி நடிகையாக இருந்தபோது நைட் பார்ட்டியில் அதிகம் கலந்து கொண்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகினார்.

இதனால் தாறுமாறான உடல் எடை ஏறிய கிரண் தற்போது 42 வயதில் கொழுக்கு முழுக்குன்னு இருக்கிறார். இந்த சூழலிலும் கிளாமர் தூக்கலான உடையில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் போட்டோஸ் போன்றவற்றை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று சோசியல் மீடியாவில் ஒரு கூட்டம் இருக்குது. இப்போது சுத்தமாகவே பட வாய்ப்பு இல்லாத கிரண், வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டானார். அதிலும்  நீச்சல் உடையில் இளசுகளை திணறடிக்கிறார். இவருடைய அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோ கால்களுக்கு பல லட்சம் விலை வைத்து பணம் சம்பாதிக்கிறார்.

Also Read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

Trending News