செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வில்லியாக நடித்து கெரியரை தொலைத்த 5 நடிகைகள்.. நயன்தாராவிற்கு சக்களத்தியாக மாற துடித்த ரீமா சென்

திரை பிரபலங்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தால்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறார்கள். ஆனால் அப்படி நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என எண்ணி நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்த கதாநாயகிகள் 5 பேர் இப்போது ஆல் அட்ரஸ் இல்லாமல் போனார்கள்.

ரீமாசென்: மாடல் அழகியாக சினிமாவில் தோன்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் சாக்லேட் பைய் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பின் தெலுங்கு, வங்காள மொழி படங்களிலும் மேலாதிக்கம் செலுத்தினார். பின் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வில்லியாக மாறிய ரீமாசென் தனது சினிமா கெரியரை தொலைத்துவிட்டார். அதன் பின் சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் 2012 ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

Also Read: விஷாலை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓஸ்ட் ஆன ஆட்டிட்யூட்

பூர்ணா: கேரளத்து பைங்கிளியாக தமிழுக்கு என்ட்ரி கொடுத்த இவர் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, தலைவி போன்ற படங்களிலும் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதேசமயம் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் கால் பதித்த இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடிவீரன் போன்ற படத்தில் கொடூரமான வில்லியாக தோன்றி அதன் பிறகு சினிமா வாய்ப்பை இழந்தார்.

பார்வதி நாயர்: 2014 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன் பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக தோன்றி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன நடிகையாகவே மாறினார்.

Also Read: குடும்ப குத்து விளக்காக இருந்து கவர்ச்சிக்கு மாறிய 7 நடிகைகள்.. எல்லாம் பணம் படுத்துறப்பாடு

மும்தாஜ்: 1999 ஆம் ஆண்டு மோனிஷா என் மோனோலிசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான மும்தாஜ், அதன் பிறகு ஏகப்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தார். பின் 2009 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படத்தில் வில்லியாக தோன்றி பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இதனால் அவரது சினிமா கெரியரே ஒன்னும் இல்லாமல் போனது.

சங்கீதா: காஸ்டியூம் டிசைனர் ஆகவும், பின்னணிப் பாடகியாகவும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், 90-களில் இடைப்பகுதியில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வெளியான பிதாமகன், தனம் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டார். இருப்பினும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த உயிர் படத்தில் கணவரின் தம்பியை திருமணம் செய்து கொள்ள அடம் பிடிக்கும் வில்லியாக நடித்து தாய்மார்களிடம் சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டார். இதன்பின் இவருடைய இமேஜ் டேமேஜ் ஆனதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் 20க்கு மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்து வெளியிட்டார்.

Also Read: திருமணத்திற்குப் பின் நடிப்பை கைவிட்ட 7 கனவு கன்னிகள்.. உங்கள பித்து பிடிக்க வச்சது யாரு?

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் வில்லியாக நடித்த பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஒருவேளை அவர்கள் நேர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்து நிற்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் பலர் எண்ணினர்.

Trending News