சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

உடல் எடையை வைத்து மார்க்கெட்டை இழந்த 5 நடிகைகள்.. புடிச்சாலும் புளியங் கொம்பாய் பிடிச்ச ஹன்சிகா

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக ரவுண்டு கட்டிய ஐந்து பேர் திடீரென்று தங்களது உடல் எடையை குறைத்து, சுத்தமாகவே மார்க்கெட்டில் இல்லாமல் தவிக்கின்றனர். இவர்கள் எல்லாம் நல்லா நடிச்சாலும் கவர்ச்சி இல்லனா அவ்வளவுதான்! என்று ஒரங்கட்டப்பட்டுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட ஹன்சிகா புடுச்சாலும் புளியங்கொம்பை பிடித்து செட்டில் ஆகிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த கீர்த்தி சுரேஷ் நிறைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். துவக்கத்தில் பப்ளியாக இருந்து சிவகார்த்திகேயன், விஜய், விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு ஹிட் கொடுத்தார். இவருடைய மார்க்கெட் தென்னிந்திய அளவில் எகிறி கொண்டிருந்த நிலையில் மகாநதி படத்தில் சாவித்திரியாக நடித்து, உடல் எடை ஏறினால் அதன் பின் டயட் ஃபாலோ செய்த கீர்த்தி சுரேஷ் செவுத்துல ஓட்டுன பல்லி போல் மாறிவிட்டார்.

தற்போது எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேசை பார்க்க சகிக்கல என்று அவருடைய ரசிகர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் கீர்த்தி சுரேஷுக்கும் இப்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் சரிந்து விட்டது.

வரலட்சுமி: போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு இவர் வில்லியாகவும் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். கொழுக்கு மொழுக்குன்னு இருந்த வரலட்சுமி, திடீரென்று தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

இதற்காக ஒரு நாளைக்கு அவர் 2 மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறிவிட்டார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு வரலட்சுமியை ஒல்லியாக பார்ப்பதற்கு சுத்தமா பிடிக்கவில்லை. மார்க்கெட்டை இழந்த வரலட்சுமி தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

Also Read: 2வது திருமணம் செய்து கொண்ட அமலாபால்.. இணையத்தை அலங்கரித்த கல்யாண போட்டோஸ்

பிரியா பவானி சங்கர்: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவருடைய அசத்தும் அழகு, அசாத்தியமான நடிப்பு, இயல்பான குணத்தால் வெகு சீக்கிரமே முன்னணி நடிகையாக உருவாகினார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் முதலில் கொஞ்சம் கொழுக்கு மொழுக்குன்னு இருந்து அதன்பின் ஸ்லிம்மாக மாற வேண்டும் என்ற தவறான முடிவை எடுத்தார்.

இதற்காக ஜிம் வொர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். தற்போது சுகர் வந்தது போல் இருக்கும் பிரியா பவானி சங்கருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி: குட்டி குஷ்பு என தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இவர் தொடர் பட வாய்ப்புகளை பெறுவதற்காக டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறினார். ஆனால் கொழு கொழுன்னு இருந்த ஹன்சிகாவை தான் ரசிகர்களுக்கு பிடித்தது.

பப்ளிக் ஹீரோயின் ஆக பார்த்த ஹன்சிகாவை இப்போது எலும்பும் தோலுமாக பார்க்க சகிக்கல. முன்பு இருந்த கியூட்னஸ் இப்போது ஹன்சிகாவிடம் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகளும் கிடைக்காததால் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திடீர் என்று திருமணம் செய்து கொண்டார். புடிச்சாலும் புளியங் கொம்பை பிடித்து ஹன்சிகா செட்டில் ஆகிவிட்டார்.

அமலாபால்: முதல் படத்திலே சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்து அதன் பின் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட முன்னணி நடிகை தான் அமலாபால். இவர் தலைவா படத்தில் கதாநாயகியாக நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடத்திலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து அமலாபால் ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவர் உடல் எடையை குறைந்ததால் சுத்தமாகவே மார்க்கெட் இல்லாமல் போச்சு. இந்த சூழலில் தனது பிறந்த நாள் அன்று காதலன் ஜகத் தேசாயை அறிமுகம் செய்து, அவரை இப்போதைக்கு இரண்டாவது திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

Also Read: கோடிக்கணக்கில் வசூலித்த சின்னத்தம்பி.. பிரபு, குஷ்பூ வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?

Trending News