சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கோடீஸ்வரர்களை திருமணம் செய்து செட்டிலான 5 நடிகைகள்.. 30 வயது வித்தியாசம் பார்க்காத குட்டி ராதிகா

5 Actresses Marriage: சினிமாவில் இருக்கும் அழகான நடிகைகள் தங்களது அழகிற்கு நிகராக மாப்பிள்ளை தேடாமல் பணத்திற்காக கோடீஸ்வரர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி பார்ப்போம்.

ஸ்ரீதேவி: 80களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியை பல இளம் ஹீரோக்கள் துரத்தி துரத்தி காதலித்தனர். ஆனால் ஸ்ரீதேவி கோடீஸ்வரர் ஆன தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஸ்ரீதேவி கர்ப்பமானதால் உடனடியாக அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆகும்போது ஸ்ரீதேவி வயதில் போனி கபூருக்கு ஒரு மகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஸ்ரீதேவி வயது வித்தியாசத்தை எல்லாம் பார்க்காமல் பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ஸ்ரீதேவி- தயாரிப்பாளர் போனி கபூர்

shri-devi-husband-cinemapettai
shri-devi-husband-cinemapettai

குட்டி ராதிகா: இயற்கை என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த குட்டி ராதிகா, தன்னுடைய அழகான முகத்தோற்றம் ,வாட்ட சாட்டமான உடல் வாகால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார். இருப்பினும் சில காலங்கள் மட்டுமே அவரால் சினிமாவில் நிலைக்க முடிந்தது. இவர் ரத்தன் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின் ரத்தன் மரணம் அடைந்ததால் அவருடைய மரணத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இதனால் குட்டி ராதிகாவிடம் போலீசார் பல விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் பின் பொதுவெளிகளில் தலை காட்டாமல் இருந்த குட்டி ராதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னைவிட 30 வயது அதிகமுடைய முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குட்டி ராதிகாவின் திருமணத்திற்கு முக்கிய காரணம் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியிடம் இருக்கக்கூடிய பணம்தான். முதல் திருமணத்தில் செய்த தவறை 2வது திருமணத்தில் செய்யக்கூடாது என வசதி படைத்த குமாரசாமியை குட்டி ராதிகா ஒரே அமுக்காய் அமுக்கி செட்டில் ஆகிவிட்டார்.

குட்டி ராதிகா- முதலமைச்சர் குமாரசாமி

kutty-radhika-husband-cinemapettai
kutty-radhika-husband-cinemapettai

அசின்: ஜெயம் ரவி நடித்த எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் கமலஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு கட்டியவர் தான் நடிகை அசின். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஆடம்பர வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார்.

அசின்- மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மா

asin-ragul-cinemapettai
asin-ragul-cinemapettai

ஹன்சிகா: தமிழ் சினிமாவில் பப்ளிக் நடிகையாக வெகு சீக்கிரமே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார் தான் நடிகை ஹன்சிகா. இவர் அந்த சமயத்தில் ஒரு சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுப்பில் சிக்கினாலும், கடைசியில் அவர்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிட்டு பணக்கார தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா-வை கடந்த டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார் சோஹைல் கத்தூரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா- தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா

hanshika-husband-cinemapettai
hanshika-husband-cinemapettai

சீரியல் நடிகை மகாலட்சுமி: சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி நடிகையாக வளர்ந்தவர் தான் மகாலட்சுமி. இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு 6 வயதில் சச்சின் என்ற மகன் இருக்கிறார். ஆனால் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர். அதன் பிறகு மகாலட்சுமி கோடீஸ்வரரான தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றது. ஏனென்றால் குண்டு குண்டுன்னு இருக்கும் ரவீந்தருக்கு இவ்வளவு க்யூட்டான மனைவியா என இளசுகளை வயிறு எரிய செய்தது.

சீரியல் நடிகை மகாலட்சுமி- தயாரிப்பாளர் ரவீந்தர்

maha-ravindhar-1-cinemapettai
maha-ravindhar-1-cinemapettai

Trending News