கணவர்களின் ஆதிக்கத்தால் 5 நடிகைகளின் கேரியருக்கு வந்த ஆப்பு .. சத்யராஜ் உருட்டிய ஆறடி அரேபிய குதிரை

Actress Asin: சினிமாவில் சமந்தா, நயன்தாரா போன்ற பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகிறார்கள். நல்ல நடிப்பு திறமை இருந்தும் இவர்கள் நடிப்பை விட்டு விட்டு போனதற்கு அவர்களுடைய அவர்களுடைய கணவர்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஐந்து நடிகைகளும் தங்களுடைய கணவர்களால் தான் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள்.

அசின்: நடிகை அசின் ஹீரோயின் ஆக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அதேபோன்று இவருக்கு பாலிவுட்டில் சல்மான்கான் உடன் ஜோடி சேரும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அசின் வந்த பிறகு நடிகை திரிஷாவின் மார்க்கெட் மொத்தமாக சரிந்தது என்று கூட சொல்லலாம். இவர் மைக்ரோமேக்ஸ் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரை திருமணம் செய்த பிறகு சினிமாவில் தலை காட்டவில்லை.

Also Read:முத்தக்காட்சியின்னா உங்களுக்கு நோ கால்ஷீட்.. 90-களில் தயாரிப்பாளரை ஓட விட்ட 5 நடிகைகள்

மீரா ஜாஸ்மின்: நடிகை மீரா ஜாஸ்மின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் எல்லா மொழி படங்களிலும் முத்திரை பதித்தார். மார்க்கெட் இருக்கும்பொழுது திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

நமீதா: நடிகை நமீதா சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் கவர்ச்சி ஹீரோயினாக மாறியவர். நடிகர் சத்யராஜ் இவருடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் கூட இருக்கும். திருமணத்திற்கு பிறகு நமீதா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

Also Read:திருமணத்திற்கு பின்பும் கொழுப்பெடுத்து திரிந்த நடிகை.. மாமனார் முன்பு அரைகுறை ஆடையில் அலைந்த கேவலம்

நஸ்ரியா: தென்னிந்திய ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் நடிகை நஸ்ரியா. தமிழில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு இங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். முன்னணி ஹீரோயின் ஆக வளர்ந்து வந்த நேரத்திலேயே இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

ஜெனிலியா : தன்னுடைய துறுதுறு நடிப்பால் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கிறங்கடித்தவர் தான் நடிகை ஜெனிலியா. தமிழில் இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்னர் விஜய்யுடன் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் நடித்த இவர் பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ரித்தேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் தலை காட்ட வில்லை.

Also Read:நடிகையை பதம் பார்க்காமல் விடாத வாரிசு நடிகர்.. பழசை நோண்டி நொங்கெடுக்கும் பயில்வான்