திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமந்தா போல ரகசியமான நோயால் பாதிக்கப்பட்ட 5 நடிகைகள்.. விஜய் பட நடிகைக்கு ஏற்பட்ட கொடுமை

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்கு பின் அதிலிருந்து மீண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சமந்தாவுக்கு இந்த பிரச்சனை வந்த பிறகு தான் பல நடிகைகளுக்கு இப்படி பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது தமிழில் சில படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான பூனம் கவுருக்கும் அரிய வகை நோய் உள்ளதாம். இவரைத் தொடர்ந்து பிரியா மோகன் தாஸ், கௌரி மற்றும் பிரியா போன்ற நடிகைகளும் இதே போல் உடல் ரீதியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

Also Read : இவர் கூட ஜோடி போட்டு நடிச்சா , ஸ்ட்ரெயிட்டா கல்யாணம்தான்.. சமந்தா வரிசையில் சிக்கிய 2 அழகிகள்

மேலும் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நடிகைக்கு இந்த பிரச்சனை இருக்கிறதாம். அதாவது கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இலியானா தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கும் தற்போது அரிய வகை நோய் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோய்க்கான சிகிச்சையை மறைமுகமாக பார்த்து வருகிறாராம். இருந்தபோதும் இந்த விஷயம் அரசல் புரசலாக வெளியே வந்துள்ளது.

Also Read : பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த சமந்தா.. வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம்

இலியானா ரகசியமாக சிகிச்சை பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளதாம். அதாவது சமந்தாவுக்கு இந்த நோய் இருக்கும் செய்தி இணையத்தில் வெளியானதும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் எப்போது வெளியே வந்தாலும் அவரைப் பற்றிய பேச்சு தான் சமூக ஊடகங்களில் நிறைந்து இருந்தது.

சமந்தா போல் நமக்கு உள்ள பிரச்சனையும் வெளியில் தெரிந்தால் இது ஒரு பேசு பொருளாக மாறிவிடும் என்ற பயத்தினாலும் பட வாய்ப்பு குறையும் என்ற அச்சமும் இலியானாவுக்கு இருந்துள்ளது. நடிகைகளுக்கு இது போன்ற அரிய வகை நோய் வருவதற்கு அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களாக தான் இருக்க கூடும் என்று பலர் கூறுகின்றனர்.

Also Read : பணத்தாசையால் கேரியரை தொலைக்கும் 3 டாப் ஹீரோக்கள்.. வாரிசு விஜய்யின் லிஸ்டில் இணைந்த தனுஷ்

Trending News