ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விஜய் பட நடிகை

Tamil Actress: சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு அழகும் நடிப்பு திறமையும் இருக்குதோ, அதே அளவிற்கு அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும். அதிலும் குறிப்பிட்டு சொல்ல கூடிய இந்த 5 நடிகைகளும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டாலும் ராசி இல்லா நடிகைகள் என பெயர் எடுத்துவிட்டனர். அதிலும் விஜய் பட நடிகைக்கு இந்த நிலைமையா என தளபதி ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஸ்ருதிஹாசன்: பாடகியாக முதன்முதலாக சினிமாவிற்கு அறிமுகமான ஸ்ருதிஹாசன், சூர்யாவுடன் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் விஷாலுடன் பூஜை, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்படி வெகு சீக்கிரமே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஏனென்றால் அவர் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், ராசி இல்லாத நடிகை என்று ஓரம் கட்டி விட்டனர். இருப்பினும் அவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்த போதிலும் உலக நாயகனின் மகளான ஸ்ருதிஹாசனை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் கைவிட்டது சோகம் தான்.

Also Read: 2023 டாப் லிஸ்டில் இடம் பெற்ற 10 ஹீரோயின்கள்.. நயனை ஓரங்கட்ட எல்லை மீறிய சமந்தா

ஹன்சிகா மோத்வானி: ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா முதல் முதலாக விஜய்யின் வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய அழகை வர்ணித்து ‘குட்டி குஷ்பூ’ என்று செல்லமாக அழைத்தனர். இதனால் அடுத்தடுத்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 என நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.

இருப்பினும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஒரு சில படங்களான போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன், போகன், துப்பாக்கி முனை, 100 போன்ற படங்கள் அனைத்தும் போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியாமல் வசூல் ரீதியாக படுத்தோல்வியை சந்தித்தது. அதன் பின் மார்க்கெட்டை சுத்தமாகவே இழந்த ஹன்சிகா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வித விதமான கவர்ச்சி போட்டோ சூட்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படியும் இவருக்கு எந்த பட வாய்ப்பும் வந்த பாடில்லை.

Also Read: மாஸ்டர் படத்திலிருந்து விஜய்க்கு வந்த புதுப்பழக்கம் .. மன்சூர் அலிகான் கூட இருந்தால் கேட்கவா வேணும்

பூஜா ஹெக்டே: தமிழில் முகமூடி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு தெலுங்கில் தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக் கொண்டார். இதனால் இவருக்கு இரண்டாவது படமே கோலிவுட்டில் தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. இதனால் அவரை ராசி இல்லாத நடிகை என்றே எல்லோரும் ஒதுக்கி வைத்து விட்டனர். இருப்பினும் சோசியல் மீடியாவில் நீச்சல் உடையில் படு கிளாமரான போட்டோ ஷூட்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே, ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆண்ட்ரியா: பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமாகி, அதன் பின் நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க துவங்கினார். இவர் வெகு சீக்கிரமே அஜித், கமல், தனுஷ் உள்ளிட்டோரின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் செம போல்டாக இருக்கும். இருப்பினும் சமீப காலமாகவே ஆண்ட்ரியாவை ராசி இல்லாத நடிகை போல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு காரணம் அவர் ஒரு சில சர்ச்சையில் சிக்கினார் என்பதாக இருந்தாலும், அவரை கதாநாயகியாக தற்போதைய சூழலில் வைத்து படம் எடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

ரகுல் ப்ரீத்தி சிங்: தடையறத் தாக்க படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ரகுல் பிரீத் சிங், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் செம க்யூட்டாக நடித்து ஃபேவரிட் ஹீரோயினாக மாறினார். அதன் பின் என்ஜிகே படத்தில் அடுத்தவர் புருஷனுக்கு ஆசைப்படும் வானதி என்ற கேரக்டரில் நடித்து தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டார். அதன்பின் இவருக்கு சுத்தமாகவே தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் தற்போது ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: தளபதி கேரியரில் நோட் பண்ண வேண்டிய முக்கியமான விஷயம்.. 6 பாலிவுட் நடிகைகளை அறிமுகப்படுத்திய விஜய்

இவ்வாறு இந்த 5 இளம் கதாநாயகிகள் தான் ராசியில்லாத நடிகைகள் என முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே தமிழில் சுத்தமாகவே பட வாய்ப்பு இல்லாமல் வந்த வழியை பார்த்து சென்றுவிட்டார்.