வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஷாலுடன் நடித்த பாவத்தால் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. சுத்தமா மார்க்கெட்டை காலி செய்த லட்சுமி மேனன்

டாப் நடிகர்களுடன் நடிகைகள் போட்டி போட்டு கொண்டு நடிக்க ஆசைப்படுவார்கள். அப்படித்தான் முன்னணி நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த விஷாலுடன் ஜோடி போட வேண்டும் என ஆசை ஆசையாய் நடித்த நடிகைகள் அவருடன் நடித்த பாவத்தால் கிசுகிசுக்கப்பட்டது மட்டுமல்லாமல் மார்க்கெட்டையும் சுத்தமாகவே இழந்து விட்டனர்.

திரிஷா: சமர் படத்தில் ஜோடியாக நடித்த விஷால் திரிஷா இருவரும் காதலர்கள் என கிசுகிசுக்கப்பட்டது . ஏனென்றால் இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் தூக்கலான காட்சிகள் திரை மறைவிலும் தொடர்ந்தது. ஆனால் இந்த ரிலேஷன்ஷிப் கொஞ்ச நாளிலேயே புட்டு கிச்சு.

ஸ்ருதிஹாசன்: விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் பூஜை. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க இதில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். குடும்ப செண்டிமெண்ட் படமான இந்த படத்தில் விஷால் ஸ்ருதிஹாசனின் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. இந்த படத்திற்குப் பிறகு இருவரும் லவ் பண்ணுவதாக கிசுகிசுக்கப்பட்டது.

Also Read: மூக்கு முட்ட குடிச்சிட்டு காரில் மோதிய விஷால் பட நடிகை.. போதை தெளிந்த பின் பட்ட அசிங்கம்

வரலட்சுமி: சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் விஷால் இருவரும் காதலர்கள் என சொல்லப்பட்டது. இவர்கள் இருவரும் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை. ஆனால் சண்டைக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு வில்லியாக வரலட்சுமி நடித்திருந்தார். இருந்தபோதிலும் விஷால் வரலட்சுமியின் காதல், திருமணத்தில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கருத்து வேறுபாடின் காரணமாக பிரிந்து விட்டனர்.

லட்சுமி மேனன்: கோலிவுட்டின் இளம் நடிகையான லட்சுமி மேனன் தமிழில் விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டுமல்ல இந்த படத்தில் விஷால் லட்சுமிமேனனின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. மேலும் விஷாலுடன் இணைந்து நடித்த படங்களில் லிப் லாக், படுக்கையறை காட்சி என லட்சுமி மேனன் கொஞ்சம் கூட யோசிக்காமல் நடித்து சுத்தமாகவே தன்னுடைய மார்க்கெட்டை காலி செய்து விட்டார்.

Also Read: திருமணத்திற்கு முன்பே ஆடிய ஆட்டம்.. கேரளாவே கதி என்று கிடக்கும் விஷால்

ரீத்து வர்மா: விஷால் தற்போது ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். டைம் ட்ராவல் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஹீரோயின் ரீத்து வர்மா நடித்துள்ளார். அடுத்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் என பெரும் பட்டாளமே இணைந்து நடித்திருக்கின்றனர். எல்லா படத்தைப் போலவே இந்தப் படத்திலும் விஷாலுடன் சேர்ந்து நடித்ததால் ரீத்து வர்மாவை பற்றிய கிசுகிசுப்புக்களும் தற்போது கிளம்புகிறது.

இவ்வாறு விஷால் கூட நடித்த அனைத்து படங்களின் ஹீரோயின்களுக்கும் இதே கதிதான். இந்த 5 ஹீரோயின்கள் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டவர்கள். அதிலும் லட்சுமி மேனன் தன்னுடைய மார்க்கெட்டையே சுத்தமாக இழந்துவிட்டார்.

Also Read: அரசியல் ஆசையால் சினிமாவில் பேரை தொலைத்த 4 நடிகர்கள்.. ரீ என்ட்ரி கொடுக்கும் சரத்குமார்

Trending News