புதன்கிழமை, ஜனவரி 15, 2025

GV Prakash : ஓவர் நெருக்கத்தால் ஜிவி பிரகாஷ் உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. விவகாரத்துக்கு இதுதான் காரணமா.?

இன்றைய தினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த செய்தி தான். 11 வருட இல்லற வாழ்க்கையில் இருந்த இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்த ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய நிலையில் டார்லிங் படத்தை தவிர பெரிதாக அவருக்கு எந்த படமும் போகவில்லை. இந்நிலையில் படங்களில் நெருக்கமாக நடிகைகளுடன் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் கயல் ஆனந்தி உடன் த்ரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு ஒரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு என தொடர்ந்து மூன்று படங்களில் நடித்ததால் இவருடன் ஜிவி பிரகாஷ் கிசுகிசுக்கப்பட்டார். அடுத்ததாக பேச்சுலர் படத்தில் திவ்யபாரதியுடன் மிகவும் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ் உடன் நெருக்கமாக நடித்த நடிகைகள்

இந்த படம் வெளியானபோது ஜிவி பிரகாஷ் இப்படிப்பட்ட காட்சியில் நடித்திருக்கிறார் என பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதோடு திவ்யா பாரதி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைத்து வைத்து செய்திகள் பரவத் தொடங்கியது. அடுத்ததாக கடந்த ஆண்டு வெளியான அடியே படத்தில் கௌரி கே கிஷானுடன் நடித்திருந்தார்.

96 படத்தின் மூலம் பிரபலமான கௌரி பல படங்களில் கவர்ச்சி காட்டி நடித்த நிலையில் அடியே படத்திலும் ஜிவி பிரகாஷ் உடன் நெருக்கமாக நடித்திருந்தார். மேலும் பென்சில் படத்தில் நடித்த போது ஸ்ரீதிவ்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். இதை அடுத்து 100% காதல் என்ற படத்தில் ஷாலினி பாண்டே உடன் ஜிவி பிரகாஷ் எல்லை மீறிய காட்சிகள் நடித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து ஹீரோயின்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து வந்ததால் கூட சைந்தவி விவாகரத்து பெற்றிருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து செய்தி கோலிவுட்டில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News