வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரொம்ப காட்ட முடியாது என பெயரை கெடுக்காமல் இருக்கும் 5 நடிகைகள்.. சேலையில் கிறங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்

சினிமாவில் கவர்ச்சியை காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கின்ற கருத்தை உடைத்து எறிந்து, இப்போது வரை கவர்ச்சியை காட்டாமல் பெயரைக் காப்பாற்றி வரும் 5 நடிகைகளை ரசிகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் பிரியா பவானி சங்கர் சேலையில் ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கிறார்.

சாய் பல்லவி: அற்புதமான நடிப்பும், நடனத் திறமையும் கொண்ட இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இவரை ஹீரோயினாக புக் செய்யச் சொல்லி பல ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகின்றனர். இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சியை காட்டாமல் சேலை, சுடிதார், பாவாடை சட்டை என கண்ணியமாக நடித்து பெயரைக் காப்பாற்றி வருகிறார்.

பிரியா பவானி சங்கர்: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் பெரும்பாலும் நடிக்கும் படங்களில் சேலைகளிலும் தாவணிகளிலும் மட்டுமே நடிக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் குடும்ப குத்து விளக்காகவே காட்சியளித்தார்.

Also Read: பெங்களூர் தக்காளி போல் மாறிய பிரியா பவானி சங்கர்.. ஜெர்மனியில் இருந்து வெளியான புகைப்படங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ்: சிறு சிறு வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தங்கை, இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, காதலி, கதாநாயகி என எந்த வித கதாபாத்திரத்திலும் அசால்டாக நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் கவர்ச்சியாக நடிக்காமல் தொடர்ந்து வாய்ப்புகளை குவிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ்: திடீரென சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து மளமளவென அனைத்து முக்கிய ஹீரோக்களுடனும் நடித்து கோலிவுட்டில் நல்ல இடத்தை பிடித்தார். பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தெலுங்கு தமிழிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் அழகிற்காக உடல் மெலிந்து காணப்பட்டார். ஸ்லிம்மான மாறிய பிறகும் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியை காட்டாமல் தனக்கென ரசிகர்களிடம் இருக்கும் பெயரை காப்பாற்றி வருகிறார்.

Also Read: புது படமா அப்ப அந்த 5 ஹீரோயின் கிட்ட பேசுங்க.. தயாரிப்பாளர்களை தெறிக்கவிடும் ஹீரோக்கள்

நித்யா மேனன்: நித்யா மேனன் தன்னுடைய சிறந்த நடிப்பினால் 80ஸ் நாயகி ரேவதியை நினைவுக்கு கொண்டு வந்தவர். ஓ.கே கண்மணி திரைப்பட சமயத்தில் சினிமா ரசிகர்களுக்கு நித்யா மீது மிகப்பெரிய கிரஷ் இருந்தது. இவரது பப்லியான உடல் அமைப்பை எல்லாம் கண்டுகொள்ளாமல் ரசிகர்கள் இவருடைய நடிப்பை பார்த்து மயங்கி கிடக்கின்றனர். அதேசமயம் சினிமாவில் இவர் வந்த போது இருந்த மாதிரி இப்பொழுதும் கவர்ச்சியை காட்டாமல் கண்ணியத்துடன் நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் நடிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, சினிமாவில் கவர்ச்சியை காட்டாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியிருக்கின்றனர். இவர்கள் எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுடன் கவர்ச்சியையும் காட்டாமல் பெயரைக் காப்பாற்றி வருகின்றனர்.

Also Read: நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசைப்படும் 5 நடிகைகள்.. திருமணத்திற்குப் பின்னும் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்

Trending News