வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரகடான குரலில் தெறிக்கவிடும் 5 நடிகைகள்.. வரலட்சுமிக்கு வில்லி வாய்ப்பு வந்ததன் ரகசியம்

5 Heroine’s voice: ஹீரோயின்களை பொறுத்தவரை அழகான தோற்றம், மென்மையான குரல் வளம் கொண்டவர்களாக தான் இருப்பார்கள். அப்பொழுது தான் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு டப்பிங் பேச முடியும். இதுபோன்று இல்லாது, தனித்துவமான குரல் வளம் கொண்ட 5 நடிகைகளை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

ஸ்ருதி ஹாசன்: முன்னணி கதாநாயகி ஆகவும், பாடகியாகவும் தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்டவர் ஸ்ருதிஹாசன். அவ்வாறு இவர் குரலில் 3 படத்தில் கண்ணழகா கால் அழகா போன்ற பாடலை பாடியுள்ளார். மேலும் பல அனிமேஷன் திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இருப்பினும் விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் பூஜை. இப்படத்தில் இவர் பேசும் வசனம் தனித்துவம் நிறைந்ததாக படத்தில் வித்தியாசமாக பார்க்கப்பட்டது.

Also Read: படமே இல்லாமல் தலைகணத்தோடு ஆடும் நயன்தாரா.. ஓவர் அட்ராசிட்டியால் பின் வாங்கும் தயாரிப்பாளர்கள்

வரலட்சுமி: இவர் தன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களும் துணிச்சலாக கையாளும் தன்மை கொண்டவர். அதேபோல் இவரின் குரலும் தனித்துவம் நிறைந்ததாய் இருக்கும். இவரின் உடலமைப்புக்கு ஏற்ப குரலும் ரகடாய் இருப்பதால், படங்களில் இவருக்கு வில்லி கதாபாத்திரம் அருமையாக ஒத்துப் போகிறது. அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோல் ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாமணி: முன்னணி கதாநாயகியாக இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில், பருத்திவீரன் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. கிராமத்து சப்ஜெக்ட் படம் என்பதால் அதற்கு தகுந்தவாறு தன் தோற்றத்திலும், நடிப்பிலும், குரலிலும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றார். கார்த்தி உடன் இவர் பேசும் வசனங்கள் இவரின் சொந்த குரலில் தனித்துவம் மிகுந்ததாய் அமைந்திருக்கும்.

Also Read: ஆள் அட்ரஸை தெரியாமல் போன விஜய், அஜித் பட ஹீரோயின்.. சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லக்கி சாம்

ரம்யா கிருஷ்ணன்: 90 காலகட்டத்தில் இருந்து இவர் மேற்கொள்ளும் எண்ணற்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டி வருகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் தோற்றத்தையும், நடிப்பையும் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவர். அவ்வாறு படையப்பாவில் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்றி இவர் மேற்கொண்ட நடிப்பும், வசனமும் ரஜினியையே கலங்கடிக்கும் விதமாய் அமைந்திருக்கும்.

அஞ்சலி: முன்னணி கதாநாயகியாக இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில், தன்கீச் குரலால் வசனம் பேசி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று இருப்பார். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த அங்காடி தெரு, கலகலப்பு போன்ற படங்களில் இவரின் தனித்துவமான குரல் பெரிதாய் ஈர்க்கப்பட்டது.

Also Read: 5 இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அஜித்.. வந்த பாதையை மறந்து விஜய்க்கு கூஜா தூக்கும் எஸ்ஜே சூர்யா

Trending News