தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகைகள், படங்களில் நடிப்பதை காட்டிலும் வெப் தொடர்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் அதிகம் கவர்ச்சி காட்டாமல் நடித்த ஒரு சில நடிகைகள் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் மூலம் கிளாமரில் பின்னி பெடல் எடுக்கின்றன. அப்படியாக ஓடிடியின் மூலம் கவர்ச்சியில் தாராளம் காட்டும் 5 நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.
அதிதி போஹன்கர்: மராத்தியில் வெளியான லாய் பஹாரி என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்தான் அதிதி போஹன்கர். இவர் தமிழ் சினிமாவில் அதர்வா நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்னும் படத்தில் சரோஜாதேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை அடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் 2020 ஆம் ஆண்டு வெளியான ஷீ என்னும் வெப் சீரிஸில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருந்தார். அதிலும் படு கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை கிரங்கடித்து இருப்பார்.
![aaditi-pohankar](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/04/wamika-gabbi-300x169.png)
Also Read: குடிக்கு அடிமையான வாரிசு நடிகர்.. படமே ஓடாவிட்டாலும் கைவசம் 8 படங்கள்!
ஈஷா தல்வார்: சினிமா திரையுலகில் தட்டத்தின் மறையது என்னும் மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஈஷா தல்வார். மேலும் இவர் தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான தில்லு முல்லு படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ஜனனி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை என்னும் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து ஓடிடியில் வெளியான மிர்சாபூர், இந்திய காவல் படை என்னும் வெப்சீரிஸ்களில் அதீத கவர்ச்சி காட்டி இளசுகளை ஜொள்ளு விட வைத்திருப்பார்.
![isha-talwar](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/04/isha-talwar-300x200.png)
ஷோபிதா துலிபாலா: மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கியவர் தான் ஷோபிதா துலிபாலா. இவர் ஹிந்தியில் வெளியான ராமன் ராகவ் என்னும் திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதிலும் இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் பாலிவுட்டில் தி நைட் மேனேஜர் என்னும் வெப் தொடரில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளார்.
![sobhita-dhulipala](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/04/sobhita-dhulipala-300x200.png)
Also Read: அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு
வாமிகா: தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் வாமிகா கபி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என நான்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கிரஹான், ஒரு தாயின் கோபம், நவீன காதல், ஜூப்லி போன்ற வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து ஓடிடி தளங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வருகிறார்.
![wamika gabbi-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/04/wamika-gabbi-cinemapettai-300x162.png)
ராதிகா ஆப்தே: தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ராதிகா ஆப்தே. இதனைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாகவே வலம் வந்தார். அதிலும் சேக்ரெட் கேம்ஸ், கவுல், ஓகே கம்ப்யூட்டர் என்னும் வெப் தொடர்களிலும் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.
![radhika-apte](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/04/radhika-apte-300x215.png)
Also Read: மோசமான உடையில் குத்த வெச்சு போஸ் கொடுத்துள்ள கபாலி பட நடிகை.. எல்லோருமே மிருகம் தான்!