செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

முதல் படத்தில் ஹிட் கொடுத்தும், வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 5 நடிகைகள்.. வாய்ப்புக்காக ஐட்டம் நடிகையாக மாறிய கிரண்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகளுக்கு தங்களது முதல் படம் சறுக்கலைதான் தந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்த படங்கள் பல நடிகைகளுக்கு பெரிய ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் நடிக்க வந்த முதல் படத்திலேயே தங்களது வெற்றியை பதித்தாலும் பின்னாளில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்துள்ள 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

ரீமாசென்: தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தின் மூலமாகா கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் மாதவன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்த நிலையில் முக்கோண காதலை மையப்படுத்தி இப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலுக்கு ரீமாசென் ஆடிய நடனம் ரசிகர்களை இன்றுவரை கிறங்கடிக்கும். ஆனால் சில வருடங்களில் வாய்ப்புகள் இல்லாமல் அப்படியே தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார்.

Also Read: முதல் படம் மரண ஹிட், தற்போது காணாமல் போன 6 நடிகைகள்.. கவர்ச்சியால் சினிமாவை வெறுத்த மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்: மலையாள நடிகையான இவர், 2004 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். மாதவனுடன் ஜோடிப்போட்ட இப்படம் செம ஹிட்டான நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். நடிக்கும்போது கவர்ச்சிக்காட்டாத காரணத்தாலோ இவருக்கு சில வருடங்களிலேயே வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது சமூக வலைதளத்தில் கண்ணைக்கூச வைக்கும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கிரண்: நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் ஹீரோயினாக கிரண் அறிமுகமானார். இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிய நிலையில், கிரணுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. ஆனால் தீடீரென விஜய்யின் திருமலை படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியதையடுத்து, அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளும் இப்படியே வந்ததால் சினிமாவை விட்டே சென்றுவிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

Also Read: சரக்கடித்து குண்டான 5 நடிகைகள்.. சம்பாதிக்க புதுவிதமா அந்தரங்க வழி தேடிய கிரண்

கேத்ரின் தெரசா: தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படம் செம ஹிட்டான நிலையில், தொடர்ந்து கேத்ரின் தெரசாவிற்கு பட வாய்ப்புகள் வந்தது. இருந்தாலும் இவரது அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் தற்போது மார்கெட்டில்லாமல் உள்ளார்.

ரித்திகா சிங்: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக ரித்திகா சிங் அறிமுகமானார். நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த இவர், குத்துசண்டை வீராங்கனையாக வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம். இதனிடையே இவரது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார். ஆனால் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் சோசியல் மீடியாவே கதி என உள்ளார்.

Also Read: பவர்ஃபுல் கதாநாயகிகளுக்காக தாறுமாறாக ஓடிய 5 படங்கள்.. செம்பியில் மிரட்டிய கோவை சரளா

Trending News